|
(எ-டு.) புக்கன்று, புக்கின்று; உண்டன்று, உண்டின்று; வந்தன்று, வந்தின்று; சென்றன்று, சென்றின்று என வரும். ‘கூயின்று, கூயிற்று, போயின்று, போயிற்று’ என ஏனை எழுத்தோடும் ஒட்டிக்கொள்க. ‘வந்தின்று’ என்பது இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை வினையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் என்னும் ஏனைப்பாற் சொல்லான் அறிக. இந்த றகர உகரம், ‘தாலி களைந்தன்று மிலனே’ (புறம். 77:7) எனவும், ‘வியந்தன்று மிழிந்தன்று மிலனே’ (புறம். 77:10) எனவும் உயர்திணைக் கண்ணும் வந்ததால் எனின், அவை ‘களைந்தான், வியந்தான், இழிந்தான்’
என்பனவற்றிற்கு மறையாய்க் ‘களைந்திலன், வியந்திலன், இழிந்திலன்’ என நிற்கின்றவை ‘களைந்தன்றுமிலன், வியந்தன்றுமிலன், இழிந்தன்றுமிலன்’ என முற்று வினைத் திரிசொல்லாய் நின்றன.
|