|
யும் ஒருமையுமாகிய பால் அறிய வந்த, அம்மூவிரண்டும் அஃறிணையவ்வே-அவ்வாறு ஈற்றுச் சொல்லும் அஃறிணை உடையனவாம், எ-று. (21)
எவன் என்னும் குறிப்புமுற்று
அஃறிணை இருபாற்கும் உரித்தாதல்
221.
அத்திணை மருங்கின் இருபாற்கும் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே
இஃது, அஃறிணை இருபாற்கும் உரியதொரு வினைக்குறிப்புக் கூறுகின்றது.
(இ-ள்.)
எவன் என் வினா-‘எவன்’ என்னும் வினாச்சொல் அத்திணை மருங்கின் இருபாற்கிளவிக்கும் ஒக்கும் என்ப-அஃறிணையிடத்து ஒருமை பன்மையாகிய இருபாற் பொருண்மைக்கும் மிகுதி குறைவு இன்றி ஒக்கும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) அஃது எவன்? அவை எவன்? என வரும். னகர ஈறாய்
இரு பாற்கும் பொதுவாய் வருதலின், வேறே கூறினார்.
நுமக்கு இவன் எவனாம்? என்பது, முறைபற்றி நிற்றலின், அஃறிணைக்கண் வந்ததாம்.
படுத்தல் ஓசையான் ‘எவன்’ என்பது பெயருமாம். அஃது இக் காலத்து ‘என்?’ என்றும், ‘என்னை?’ என்றும் மருவிற்று.
அஃறிணைக் குறிப்புவினைமுற்று
222.
இன்றில வுடைய என்னுங் கிளவியும்
அன்றுடைத் தல்ல என்னுங் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
பண்பி னாகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ
அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்.
இஃது, அஃறிணை வினைக்குறிப்புக் கூறுகின்றது.
(இ-ள்.) இன்று இல உடைய என்னும் கிளவியும் - இன்று, இல, உடைய என்னுஞ் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் - அன்று, உடைத்து, அல்ல
|