நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   661
Zoom In NormalZoom Out


 

கரிய.  பண்பின்  ஆகிய  சினை  முதற்  கிளவி: வெண்கோட்டது,
வெண்கோட்டன;  நெடுஞ்செவித்து,  நெடுஞ்செவிய. ஒப்பொடு வரூஉங்
கிளவி: பொன்னன்னது, பொன்னன்ன என வரும்.
 

இனி, ‘அறிந்த மாக்கட்டாகுக தில்ல’ (அகம். 15:8) ‘மெல்விரல் மந்தி
குறை  கூறும்  செம்மற்றே’ (கலி. 40:16) மேற்று, வைகற்று. ‘அணித்தோ
சேய்த்தோ    கூறுமின்    எமக்கே’   (புறம்.   173:   12)   என்பன
பிறிதின்கிழமையாகிய  உடைமைப்  பொருள்  பட நின்றன. ‘வடாஅது
தெனாஅது’  (புறம்.  6:1,2)  என்பன ஏழனுருபின் பொருள்பட வந்தன.
மூவாட்டையது,  செலவிற்று  என்பன காலமுந் தொழிலும்பற்றி வந்தன.
இவை எல்லாம் உரையிற் கோடலாம். (23)
 

அஃறிணைக் குறிப்புவினைமுற்றின் ஈறு
 

223.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

இஃது, அவ்வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது.
 

(இ-ள்.)   பன்மையும்  ஒருமையும்  பால்  அறிவந்த - பன்மையும்
ஒருமையுமாகிய  பால்களை  அறிய  வந்த, அன்ன மரபிற் குறிப்பொடு
வரூஉம்   காலக்   கிளவி-அத்தன்மைத்தாகிய  முறைமையினையுடைய
காலங்   குறித்துக்கோடலொடு  வரும்  வினைச்சொற்கள்,  அஃறிணை
மருங்கின்  மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே-அஃறிணையிடத்து
மேற்கூறிய தெரிநிலைவினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல, எ-று.
 

அகரமுந் தகர றகர  உகரமும்  பெரும்பான்மை  அவ்வீறு  பற்றிப்
பாலும் இடமும் உணர்த்துதல் முற்காட்டியவற்றுள் காண்க.
 

இனி ஆகாரம் ‘இம்மணி  நல்ல,  என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு
இம்மணி