நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   662
Zoom In NormalZoom Out


 

பொல்லா, என மறையாய் வரும்.
 

இனி, வகரம்,  ‘கதவவாற்   றக்கதோ  காழ்கொண்ட  இளமுலை?’
(கலி.57.19) என்புழிக் கதத்தினையுடைய என வரும்.
 

இனித்  தெரிநிலையுடன்  கூடிய  டகர  உகரம்  பூணை உடைத்து,
என்னும்   பொருண்மைக்கண்   பூட்டு  எனவும்;  இடத்தது  என்னும்
பொருண்மைக்கண், ‘வகைதெரிவான் கட்டே உலகு’ (குறள்.27) எனவும்;
எந்நாளது  என்னும்  பொருண்மைக்கண்,  எந்நாட்  டாகுநும் போரே?
எனவும்;  விளைவினை உடைத்து; என்னும் பொருண்மைக்கண், ‘வேலி,
ஆயிரம் விளையுட்டாக!’ (பொருந. 246-47) எனவும்; குழிவினையுடைய
கண்ணை   உடைத்து,   என்னும்  பொருண்மைக்கண்,  குண்டு  கட்டு
எனவும்;   பொருள்,   இடம்,   காலம்,  தொழில்,  உறுப்பு  என்னும்
ஐவகைப்பெயரும்  அடியாக  வரும்.  ஓட  வற்று,  ஓட  வல்ல;  ஓட
வல்லாது, ஓட வல்லா என்பனவுங் கொள்க. (24)
 

விரவு வினையின் பெயரும் முறையுந் தொகையும்
 

224.

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த என்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
பிரிவுவேறு படூஉஞ் செய்திய ஆகி
இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.
 

இது,  நிறுத்த   முறையானே  விரவுவினை  உணர்த்துகின்றவற்றின்
பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
 

(இ-ள்.)  முன்னிலை - எதிர்முகமாக நின்ற பொருளினது தொழில்
உணர்த்தும்  முற்றுச்சொல்லும், வியங்கோள்-படர்க்கைப் பொருள்மேல்
ஏவற்பொருண்மையைக் கொண்