நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   664
Zoom In NormalZoom Out


 

இன்மையான், அதனான்  நிகழும்  விரவுத்தொழில் என்பது ஒன்று
இன்றாலெனின்,   அவ்விரவுத்  தொழிலைக்  கூறுகின்றவன்  அதனை
நிகழ்த்திய  வினைமுதல்  உயர்திணை அஃறிணை என்பது உணர்ந்தே
கூறுமாயினும்,  பால்காட்டும்  ஈறு  இன்மை  காரணத்தாற் கேட்டோர்
உணர்வு    இருதிணை    வினைமுதல்மேலும்   ஒருங்கு   சேறலான்,
அவ்வினைமுதற்    பொதுமையான்   நிகழும்   விரவுத்   தொழிலும்
உளவாயின. (25)
 

முன்னிலை ஒருமை வினைமுற்று
 

225.

 
முன்னிலைக் கிளவி
இஐ ஆயென வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.
 

இது முறையானே முன்னிலை ஒருமைவினை கூறுகின்றது.
 

(இ-ள்.)   அவற்றுள்   முன்னிலைக்   கிளவி-   அவ்வெட்டனுள்
முன்னிலைச்  சொல்  இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்-‘இ, ஐ, ஆய்’
என்று  சொல்ல  வருகின்ற  மூன்று  ஈற்றுச்  சொல்லும், ஒருவர்க்கும்
ஒன்றற்கும்    ஒப்பத்   தோன்றும்   -   உயர்திணை   ஆண்பாலும்
பெண்பாலுமாகிய   ஒருமைப்பாற்கும்   அஃறிணை  ஒருமைப்பாற்கும்
மிகுதி குறைவின்றி ஒப்பத் தோன்றும், எ-று.
 

இகரம், ட, த, ற ஊர்ந்து எதிர்காலம் பற்றி வரும்.
 

(எ-டு.)  உண்டி,  உரைத்தி, தின்றி.  இவற்றை உண்பை, உரைப்ப,
தின்பை என விரிக்க. இனி,
 

உரைக்கிற்றி, ‘நன்றுமன்  என்னிது  நாடாய்  கூறி’  என  நிகழ்வு
பற்றியும்  வரும். இவைதாம் எடுத்தல் ஓசையாற் கூறும்வழி, உண்பாய்,
உரைப்பா