|
(எ-டு.) உண்டனை, உண்ணாநின்றனை, உண்பை, உண்குவை,
கரியை எனவும்; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய், காரியாய்
எனவும் வரும். உரிஞினை. உரிஞினாய் என ஏனை எழுத்தோடும்
ஒட்டுக. (உரை என்றால், ஏவல் கண்ணுமாறும் உணர்க) உண்ணாநிற்றி
என்பது, எதிர்காலத்துப் பிறந்த நிகழ்காலம். இனி, உண்டிலை
உண்ணாநின்றிலை, உண்ணலை எனவும், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எனவும் மறை வரும். (26)
|
|
(இ-ள்.) இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்-இர், ஈர், மின் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும், பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்-உயர்திணைக்கண் பல்லோரிடத்தினும் அஃறிணைக்கண் பலவற்றிடத்தினும், சொல் ஓர் அனைய என்மனார் புலவர் - சொல்லுதலை ஒருதன்மை
|