|
(எ-டு.) உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்பிர், உண்குவிர்
எனவும், உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர், உண்குவீர் எனவும்
வரும். மின் பிற எழுத்துப் பெறாது, ஏற்றுழி உகரம்பெற்று எதிர்காலத்து
வரும்.
|
|
(எ-டு.) ‘உண்மின் கள்ளே, அடுமின் சோறே’ (பதிற். 18-1),
உரிஞுமின் என வரும். இதற்கு, உண்பீர், அடுவீர், உரிஞுவீர் என
விரிக்க. ‘கானம் கடத்திர் எனக் கேட்பின்’ (கலி. 7:3) என்புழிக்
கடவாநின்றீர் என நிகழ்காலத்துத் தகரம் வந்தது. இஃது எதிர்காலத்தும்
வரும்.
|
|
இனி, முன்னிலை வினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற்கு ஓதிய பொருள்பற்றி ஐயும் ஆயும்
இருவும் ஈரும் என நான்கு ஈற்றவாய் கழலினை, நாட்டை, பொன்னன்னை, கரியை; கழலினாய், நாட்டாய், பொன்னன்னாய், கரியாய்; கழலினிர், நாட்டினிர், பொன்னன்னிர், கரியிர்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர் கரியீர் என வரும். போறி என்பது போன்றனன், போன்றான் என்பது போல வந்த தெரிநிலைவினை. இனி, உண்டிலிர், உண்ணாநின்றிலிர், உண்ணலிர்; உண்டிலீர். உண்ணாநின்றிலீர், உண்ணலீர்; உண்ணன்மின் என மறை வரும்.
|