நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   667
Zoom In NormalZoom Out


 

ஈறாமெனப்பட்ட நட, வா, விரி, ஈ, கொடு, கூ, மே, கை, நொ, போ,
வௌ  என்னும் உரியீறு பதினொன்றும், உரிஞ், மண், பொருந், திரும்,
தின், தேய், பார், செல், தெவ் (வவ்), தாழ், கொள் என்னும் புள்ளியீறு
பதினொன்றும்,  போக்கு,  பாய்ச்சு,  ஊட்டு,  நடத்து,  எழுப்பு, தீற்று,
வெஃகு   என   எழு   வகையவாகிய  குற்றியலுகர  ஈறு  ஒன்றுமாக
எழுத்துவகை   இருபத்துமூன்றும்   எடுத்தல்  ஓசையான்  முன்னிலை
ஏவலொருமை  முற்றாய் நிற்கும். இவைதாமே படுத்தல் ஓசையான் அச்
செய்கைமேல்   பெயர்த்தன்மை   பட   முதல்நிலையாயும்   நிற்கும்.
அங்ஙனம்    முதல்நிலையாய்   நிற்குங்கால்   நடந்தான்,   வந்தான்,
விரிந்தான்,  ஈந்தான், கொடுத்தான், கூவினான், மேவினான், கைத்தான்,
நொந்தான்,  போயினான்,  வௌவினான்  என உயிரீறு பதினொன்றும்;
உரிஞினான்,  மண்ணினான்,  பொருநினான்,  திருமினான்,  தின்றான்,
தேய்த்தான்,   பார்த்தான்,   சென்றான்,   தெவ்வினான்,  தாழ்ந்தான்,
கொண்டான்   எனப்   புள்ளி   ஈறு  பதினொன்றும்;  போக்கினான்,
பாய்ச்சினான்,  ஊட்டினான்,  நடத்தினான், எழுப்பினான், தீற்றினான்,
வெஃகினான்  எனக் குற்றியலுகர ஈறு ஒன்றுமாக முற்றுச்சொல் விரிந்து
நின்றவாறு காண்க.
 

நடந்து  வந்தான்,  வந்து  போனான்,  விரிந்து  கிடந்தான், ஈத்து
உவந்தான்  எனவும்; நடந்த சாத்தன், வந்த சாத்தன், விரிந்த சாத்தன்,
ஈத்த  சாத்தன்  எனவும்; உரிஞி வந்தான், பொருநி வந்தான் எனவும்;
உரிஞின