நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   668
Zoom In NormalZoom Out


 

பெயரெச்சத்திற்கும் இவ்வாறே ஒழிந்த முதல்நிலைகளையும் விரித்துக்கொள்க.
 

நோக்கி,     ஒன்றனை     ஒரு    தொழிலைச்    செய்வி    என்னும்
பொருண்மைக்கண்   நடத்துவி,   நடப்பி,  வருவி,  விரிவி, விரிப்பி, ஈப்பி,
கொடுப்பி,  கூவுவி, மேவுவி,  கைப்பி,  நொவ்வுவி,  போக்குவி, வௌவுவி,
உரிஞுவி,   மண்ணுவி,   பொருநுவி, திருமுவி,  தின்பி,  தேய்ப்பி, பார்ப்பி,
செலுத்துவி,   தெவ்வுவி,    தாழ்த்துவி,    கொள்ளுவி,  வெஃகுவி  என
எதிர்காலத்திற்கு  உரிய வகரமும்  பகரமும்  முன்னிலைக்கு உரிய இகரம்
ஏறி  இடைநிலைக்கு  உரிய  எழுத்துக்களும்  பெற்று எடுத்தலோசையான்
நிற்குமென்று உணர்க.
 

நடத்துவித்தான்,      நடப்பித்தான்,     வருவித்தான்,      விரிவித்தான்,
விரிப்பித்தான்,      ஈப்பித்தான்,      கொடுப்பித்தான்,     கூவுவித்தான்,
மேவுவித்தான்,     கைப்பித்தான்,    நொவ்வுவித்தான்,   போக்குவித்தான்,
வௌவுவித்தான்,  உரிஞுவித்தான்,    மண்ணுவித்தான்,   பொருநுவித்தான்,
திருமுவித்தான்,      தின்பித்தான்,     தேய்ப்பித்தான்,    பார்ப்பித்தான்,
செலுத்துவித்தான்,   தெவ்வுவித்தான்,  தாழ்த்துவித்தான்,   கொள்வித்தான்,
வெஃகுவித்தான்   என   வருங்கால்   இடை  நிலயாகிய  எழுத்துக்களும்
பெற்று  முன்னர்  எடுத்தலோசையாய்   இடை   நின்ற   ஈறாகிய  இகரம்
படுத்தலோசைப்பட்டு இடைநிலையாய் நிற்குமென்று உணர்க.