நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   671
Zoom In NormalZoom Out


 

அவை வரும் எனவும்;
 

யான்  உண்ட ஊண், யானும் நீயும் உண்ட ஊண், யானும் அவனும்
உண்ட  உண்,  யானும்  நீயும்  அவனும்  உண்ட ஊண்; நாம் உண்ட
ஊண்,  யாம்  உண்ட  ஊண்:  நீ  உண்ட ஊண், நீயிர் உண்ட ஊண்;
அவன்  உண்ட  ஊண்,  அவள்  உண்ட ஊண், அவர் உண்ட ஊண்,
அது உண்ட ஊண், அவை உண்ட ஊண் எனவும் வரும்.
 

வியங்கோளும்,  மன  ஈறும்  எதிர்காலம்  உணர்த்தும்.  இன்மை
செப்பலும்,  வேறு  என்பதும்  மூன்று காலமும் உணர்த்தும். உண்மன
என்பது,  யான்  உண்ணும்,  நீ உண்ணும், அவன் உண்ணும் என்னும்
பொருண்மை   உணர்த்தி,   பெயர்   எச்ச   நீர்மைத்தாய்,   இறந்த
வழக்கிற்றாய்  வரும்.  இச்செய்யும்  என்னும் வாசகத்தை அக்காலத்து
மன   என்னும்   வாசகத்தானும்   வழங்குதலின்,   ஆசிரியர்   மன
என்பதனை ஈண்டு வேறாக ஓதி, எழுத்து ஓத்தினுள்ளும்.
 

‘செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும்’  (எ.210) என்றார். யாம்
நாம் என்பவற்றை இன்மை செப்பல் முதலியவற்றோடும் ஒட்டுக. (28)
 

வியங்கோள்முற்று தன்மை முன்னிலைகளில் வாராமை
 

228.

அவற்றுள்,
முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி.
 

இஃது, எய்தியது விலக்கிற்று.
 

(இ-ள்.)  அவற்றுள் - மேல் எஞ்சிய கிளவி என்னப்பட்ட ஏழனுள்,
வியங்கோட்கிளவி-ஏவற்பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்துஞ்
சொல்,        முன்னிலை        தன்மை        ஆயீரிடத்தொடும்
மன்னாதாகும்-முன்னிலையும்   தன்மையுமாகிய    அவ்விரண்டிடத்துப்
பொருளோடும்  அஃறிணைக்  கண்  பெரும்பான்மையும் நிலைபெறாது;
உயர்திணைக்கண் பெரும்பான்மையும் நிலைபெறும், எ-று.
 

எனவே, ப