|
|
|
செய்தென் எச்சக்குறிப்பு.
|
|
செய்து என்பதற்கு, ஓடாநின்று போயினான் எனவும், ‘அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு’ (பெரும்பாண். 1,2) எனவும், ‘தலைப்பெயற் கரும்பீன்று, முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்’ (கலி.101:1,2) எனவும் நிகழ்கால வாய்பாடும் சிறுபான்மை உளது என்று உணர்க.
|
|
நக்கு என்பது நகு என்னும் முதல்நிலைக்கண் விரிந்த நகுதல் என்னும் வினைப்பெயர் அடியாகச் செய்து என்னும் வினையெச்சந் தோன்றி, நகுதலைச் செய்து என்னும் பொருள்தந்து நின்றது.
|
|
இனி, ஊகாரம், உண்ணூ வந்தான்; எனவும், ‘படுமகன் கிடக்கை காணூஉ’ (புறம்.278:8) எனவும் ‘நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்’ (பதிற். இலங்குதொடி) எனவும் பின்வரும் தொழிற்கு இடையின்றி விரைவு உணர்த்தி முன்வரும் தொழில்மேல் இறந்தகாலம்பற்றி வரும்.
|
|
ஆகாரம் உண்ணா எனவும், ‘கல்லாக் கழிப்பர்’ (நாலடி. 366) எனவும், ‘நிலங்கிளையா நாணிநின்றோள்’ (அகம்.16:15.6) எனவும் வரும். ஆகாரம் வினையெச்சமாய் வருதல், ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்’ (எ.222) என்பதனான் பெறப்படும்.
|
|
இனிப் பகர உகரம் ‘பல்கால், வாக்குபு தரத்தர வருத்தம் வீட, ஆர உண்டு’ (பொருந. 86-88) எனவும், ‘புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த’ (புறம். 33: 12) எனவும் பெரும்பான்மை இறந்தகாலத்து வரும். அப் புகரம் நகுபு வந்தான் என்புழி, நகாநின்று வந்தான் என்று முடிக்குஞ் சொல்லான் உணரப்படும் தொழிலோடு உடன்நிகழ்ந்து, நிகழ்காலத்தும் வரும். அது, ‘வாடுபு வனப்போடி’ (கலி. 16:2) என வரும். உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் ஏற்புழி வரும்.
|
|
இனி, என என்பது, க, ட, த, ற ஊர்ந்து, இறந்தகாலம் பற்றி முடிக்குஞ் சொல்லான் உணரப்படும் தொழிற்குத் தன் முதல்நிலைத் தொழில் காரணமாய் விரைவுப்பொருள் உணர்த்தும்.
|
|
(எ-டு.) சோலை புக்கெ
|
 |