நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   682
Zoom In NormalZoom Out


 

டுந்தாம்      பதிபாங்குக்    கைதெறப்     பட்டு,        வெறிநிரை வேறாகச்சார்ச்சாரல்     ஒடீ,      நெறிமயக்குற்ற’        (கலி.12:4,7) எனவுங்   காரண  காரியப்பொருளவாய்த்     தமக்கு   உரிய  வினை முதலானன்றிப்  பிற வினைமுதலான் முடிந்தன.
 

ஞாயிறு     பட்டு வந்தான்; ஞாயிறு படூஉ வந்தான்;  ஞாயிறு படுபு
வந்தான்  என்பன  காரண காரியமின்றி அங்ஙனம்  வந்தன. ‘உரற்கால்
யானை  ஒடித்  துண்டெஞ்சிய யா’ (குறுந். 232)  என்பதும் அது. இனி,
ஆ  கிடந்து  செறு  விளைந்தது  என்றது,   இடத்து நிகழ் பொருளின்
தொழில்  இடத்திற்கு ஏற்றிச் செறுவின்  வினையொடு முடிந்தது. இதற்கு
வினைமுதல்    தானே   செயப்படுபொருள்   ஆயிற்று.   ‘பூணணிந்து
விளங்கிய   புகழ்சால்  மார்ப!’  (பதிற்.65:12)  என  அணிந்து என்னும்
முதல்வினை  சினைவினை  கொண்டது.  உண்டு  பசி கெட்டதும் அது.
இவை காரண காரியப் பொருளவாய்ப்  பிறவாற்றான் முடிந்தன.
 

ஏனை     வினையெச்சங்கட்கு  வினமுதல் வினையும் பிறவினையும்
ஒப்ப  உரியவாய்  வருதலின், ஒரு  சூத்திரத்தாற் கூறினார். இம்மூவகை
எச்சமும்  வினைமுதல்  கொள்ளுங்காற் காரணகாரியப் பொருளவாகாது
வருதலின்,  அதனையும்  வேறு கூறி, சினைவினை  முதல்வினையொடு
முடியுங்கால்    பெரும்பான்மை    காரண   காரியப்   பொருட்டாயே
வருதலானும்,  முதல்வினை   தான்  பிற வினைமுதலான் முடியும்வழிப்
பெரும்பான்மை காரண காரியப் பொருட்டாயே வருதலானும், அவற்றை
இரண்டு  சூத்திரத்தான்   கூறினார். ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல்
குறிய’  (457)  என்ற சூத்திரத்தான்  வினையெச்சங்கள் எல்லாம் பெயர்
வேறுபட்டும் ஈறு வேறுபட்டும்  சிறுபான்மை வரும் என்று பொதுவாகக்
கூறினார் ஆதலின், அதன்கண்ணே பிற