நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   683
Zoom In NormalZoom Out


 

வினைமுதல்      கொண்டனவற்றையும்   அடக்குதல்    பொருந்தாது.
என்னை?  அவை  வழக்கிடத்தும்   செய்யுளிடத்தும்   பெரும்பான்மை
வருதலானும்,   ‘வினைமுதல்    முடிபின’   (232)   என்ற  விதி  பிற
வினைமுதல்  கொள்ளாமையை   வலியுறுத்து நிற்றலின் கொள்ளுதற்குச்
சூத்திரவிதி வேண்டு மாதலானும் என்பது. (34)
 

ஒழிந்த வினையெச்சங்கள் இருவினையும் கொண்டு முடிதல்
 

234.

ஏனை எச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
தாமியல் மருங்கின் முடியும் என்ப.

 

இஃது, ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுகின்றது.
 

(இ-ள்.)  ஏனை   எச்சம்-முதல்  நிலை  மூன்றும்  அல்லாத  பிற
வினையெச்சம்,     வினை   முதலானும்-வினைமுதல்   வினையானும்,
ஆன்வந்து   இயையும்  வினைநிலையானும்-ஆண்டு வந்து பொருந்தும்
பிற  வினையானும்,   தாம்  இயல் மருங்கின் முடியும் என்ப-வரையறை
இன்றித்  தாம்   இயலுமாற்றான்   முடியும்  என்று       சொல்லுவர்
ஆசிரியர், எ-று.
 

(எ-டு.)  மழை  பெய்தெனப் புகழ் பெற்றது; மழை பெய்தென மரம்
குழைத்தது எனவும்,  மழை பெய்யியர் எழுந்தது; மழை பெய்யியர் பலி
கொடுத்தனர்  எனவும்,  மழை  பெய்யிய   முழங்கும்; மழை பெய்யிய
வான்  பழிச்சுதும்  எனவும்,   மழை  பெய்யின்  புகழ்  பெறும்; மழை
பெய்யின்  குளம்  நிறையும்   எனவும்,  மழை பெய்யப் புகழ் பெற்றது;
மழை  பெய்ய  மரம்   குழைத்து எனவும், மழை பெய்தற்கு முழங்கும்;
மழை  பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்   எனவும், இறந்தபின் இளமை
வாராது; கணவன் இனிது உண்ட பின் காதலி முகம் மலர்ந்தது எனவும்,
கடுத்  தின்னாமுன்  துவர்த்தது;  மருந்து  தின்னாமுன் நோய் தீர்ந்தது
எனவும்,   உரைத்தக்கால்   உரைபல்கும்;    ‘வலனாக  வினையென்று
வணங்கிநாம்    விடுத்தக்கால்,   சுடரிழாய்   நமக்கவர்   வருதுமென்
றுரைத்ததை’  (கலி.  35:15,16)  எனவும்  நல்வினைதான்  உற்றறக்கடை
உதவும்;   நல்வினைதான்   உற்றக்கடை   தீவினை   வாரா  எனவும்,
நல்வினை தான் உற்றவழி உதவும்; நல்வினைதான் உற்ற