நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   685
Zoom In NormalZoom Out


 

அதன்    குறிப்   பெச்சமும்    உடன்   அடுக்கி      முடிந்தனவும் பிறவும் ‘பன்முறை யானும்’ என்ற தனாற் கொள்க.
 

வினையெச்சம்     பன்முறையான்   அடுக்கி  ஒரு    சொல்லான்
முடியும்,  எனவே,  பெயரெச்சம்    ஒரு    முறையான்      அடுக்கி
ஒரு  சொல்லான் முடியும்,     என்பதாம்.       ‘நெல்      அரியும்
இருந்தொழுவர்’   (புறம்.  24)   என்னும்   புறப்        பாட்டினுள,
பாயுந்து,  தூங்குந்து,     தரூஉந்து,   பாயும்  என்னும்   பெயரெச்சம்|
அடுக்கி  மிழலை  என்னும்     ஒரு     பெயர்கொண்டு   முடிந்தன.
ஆண்டு      நல்லூர்       கெழீ        இய            என்னும்
பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. 36)
 

பெயரெச்சத்திற்கு முடிக்கும் சொற்கள்
  

236.

நிலனும் பொருளும் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன உரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.
  

இது  செய்யும்,   செய்த   என்னும்   பெயரெச்சத்திற்குப் பொருள்முடிபு கூறுகின்றது.
  

(இ-ள்.)     செய்யும்   செய்த  என்னும்    சொல்லே - செய்யும்,
செய் என்னுஞ்    சொற்கள்   (இன்னதற்கு,  இது   பயன்   என்னும்
இரண்டு   ஒழித்து);   நிலனும்    பொருளும்    காலமும்  கருவியும்
வினைமுதற்கிளவியும் வினையும்   உளப்பட    அவ்வறு  பொருட்கும்
ஓரன்ன  உரிமைய  - நிலப்பொருளும்    செயப்படு      பொருளும்
காலப்பொருளும்    கருவிப் பொருளும்     வினைமுதற்  பொருளும்
என்ற       ஐந்துடனே   வினைப்பொருளுங்கூடச்    சொல்லப்பட்ட
அவ்வறு    வகைப்    பொருட்கும்     ஒத்த        உரிமையினை
உடையவாம், எ-று.
  

(எ-டு.)  வாழும்  இல்,   கற்கும்  நூல், துயிலும் காலம், வனையும்
கோல், ஓதும் பார்ப்பான்