நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   686
Zoom In NormalZoom Out


 

உண்ணும்     ஊண்  என  உம்     ஈறு  கால  எழுத்துப்  பெறாது
ஆறுபொருட்கும்  உரித்தாய்  வந்தது.  புக்க இல், உண்ட சோறு, வந்த
நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன்,  போயின போக்கு என அகரஈறு
க,  ட, த, ற வும் யகர னகரமும் ஊர்ந்து, ஆறு பொருட்கும் உரித்தாய்
வந்தது.  இவற்றுள்  வினைமுதற்கிளவி ஒழிந்தனவற்றிற்கு  வினைமுதற்
பொருள்  முன்  வந்தே  பின்வரும்  வினையொடு   முடிந்து பொருள்
தருதலும், வினைமுதற் கிளவியாயின் பின்வரும்  வினையொடு முடிந்தே
பொருள்தருதலுங்   கொள்க.   இவற்றிற்குச்  செய்யாநிற்கும்   எனவும்
செய்யாநின்ற   எனவும்   வரும்  வாய்பாட்டு  வேற்றுமை  ‘ஒன்றென
முடித்த’லாற்  கொள்க.  ‘மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்டொடீ!
நின்முகம்  காணும்  மருந்தினேன்  என்னுமால்’ (கலி.60:18,19)  என்புழி,
நோய்  தீர்தற்குக்  காரணமாகிய  மருந்து  என  வருங்  காரணத்தைக்
கருவிக்கண்ணும்,   நின்   முகத்தைக்  காண்டல்  காரணமாக   அதன்
காரியமாகப் பிறந்த அருளை மருந்தாதல் தன்மையாக உடையேன்  என
வருங்  காரியத்தை  ஒன்றென  முடித்தற்கண்ணும்  அமைத்துக்கொள்க.
‘தேரொடும் புறங்காணே னாயின் சிறந்த இவள்’ (புறம். 71) என்பதூஉம்,
‘நிலம்பூத்த மரமாயின்’ என்பதூஉம் காரணத்தின்கண்ணும், ‘ஆறுசென்ற
வியர்’    என்றதனை    ஆறு   சேறலான்   வந்த   வியர்   எனக்
காரியத்தின்கண்ணும்  அடக்குக.  ‘ஆர்களிறு  மிதித்த நீர்’ (குறுந். 52)
எள்    ஆட்டின    எண்ணெய்;    உண்ட    எச்சில்   என்பனவுங்
காரியத்தின்கண் அடக்குக. ‘குண்டு சுனைப் பூத்த வண்டு  படு கண்ணி’
(முருகு.   199)  ‘நூலாக்  கலிங்கம்  வாலரைக்  கொளீஇ’  (பதிற்.12:21)
என்பன,  ‘பூத்த  பூவான்  இயன்ற  கண்ணி, நூலாத நூலான்  இயன்ற
கலிங்கம்  என ஒற்றுமைநயம் பற்றிச் செயப்படுபொருண்மேல்  நின்றன.
‘பொச்சாவாக்  கருவியான்  போற்றிச்  செயின்.’  (குறள்.537)  என்பது
கருவிக்கண்    அடங்கும்.    அரசன்  ஆ   கொடுக்கும் பார்ப்பான்,
அரசன் ஆ