|
முற்றிற்கு இலக்கணம். அச் செய்யும் என்னுஞ் சொல் வாழும் இல் எனப் படுத்தல் ஓசையான் கூறியவழி, அம்முடிக்குஞ் சொல்லான் அமையாது, நன்று என மற்றும் ஒரு சொல் நோக்கி நிற்றல் எச்சத்திற்கு இலக்கணம்.
இனி, அம் ஈறு முதலிய முற்றுச் சொற்கள் எங்ஙனம் முற்றி நிற்கும் எனின்,
‘எத்திறத்தானும் பெயர்முடி பினவே’ (429) என்பதனான் வினைமுதலொடு
முடிந்து, ஈண்டுக் கூறியவாறே முற்றி நிற்கும் என்க. பெயர்பற்றி
நில்லாது, ‘தாமேயும் தொடர்ப்பொருள் உணர்த்தி முற்றிநிற்கும்’ எனச்
சேனாவரையர் கூறினாராலெனின், ‘சாத்தற்குச்சோறு இடுக!’
என ஒருவன் ஏவிய வழி அவ்வேவப்பட்டான் அவற்கு அதனை ஈத்துவந்து உண்டான் என்ற வழி, யான்கூறிய சாத்தன் உண்டான் என வினைமுதல் தொடர்ப் பொருள் உணர்த்தாது பால்மாத்திரம் உணர்த்தி நிற்கும் என்பது கருதி, ‘எத்திறத் தானும் பெயர்முடி
பினவே’ (429) என்றார் ஆகலின், அது பொருத்தம் இன்று என்க. (38)
இருவகை எச்சமும் எதிர்மறை வினையையும்
கொண்டு முடிதல்
238.
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா.
இஃது, இருவகை எச்சத்திற்கும்
எதிர்மறை வினையும்
முடிவாம் என்கின்றது.
பெயர் எஞ்சு கிளவியும் வினை
எஞ்சு கிளவியும் - பெயரெச்ச மாகிய சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், எதிர்மறுத்து மொழியினும் - செய்தல் தொழிலினை எதிர்மறுத்துச் சொல்லினும், பொருள்
நிலை திரியா - தத்தம் எச்சமாகிய பெயரையும் வினையையுங் கொண்டு அல்லது அமையாத நிலைமையின் வேறுபடா, எ-று.
(எ-டு.) உண்ணா இல்லம், உண்ணாச் சோறு, உண்ணாக் காலம், வனையாக் கோல், ஓதாப் பார்ப்பான்; உண்ணா ஊண்
என வரும்.
உண்ணா என்பது, உண்ணும், உண்ட என்னும் இரண்டற்கும்
மறை. உண்ணாத என்பது, உண்ட என்பதற்கு மறை. உண்ணாது என்
|