|
பது, உண்டு, உண்ணூ, உண்ணா, உண்குபு என்பனவற்றிற்கு மறை. இதனானே, செய்பு என்பது இறந்தகாலம் உணர்த்துதல் பெற்றாம்.
|
|
இனி, செய்தென என்பது வினைமுதலொடு வருவழி, ‘மழை பெய்யாது அறம்
பெறாதாயிற்று,’ எனச் செய்து என்பதன் மறையே வருதலும், அது பிறவினையொடு வருவழி, ‘மழை பெய்யாமல் மரங் குழையாதாயிற்று,’ என இறந்த காலம் உணர்த்தும் செய்து என் எச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய் வருதலுங் கொள்க. இவ்விரண்டு எச்சத்திற்கும் செய்யாமை என்பதூஉம் மறை.
|
|
இனி, உண்ணாமைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உண்ணற்கு என்பனவற்றிற்கும், உண்ண என எதிர்காலம் உணர்த்தும் செய என் எச்சத் திற்கும் மறையாம். இனி, செயின் என்பதற்கு, மழை பெய்யாவிடின்
அறம் பெறாது, மழை பெய்யாவிடின் மரம் குழையாது எனப் பிற சொல்லான் மறை வரும். இனி, உண்ணாதபின், உண்ணாதமுன், உண்ணாக்கால், உண்ணாக் கடை, உண்ணாவழி, உண்ணாவிடத்து எனவும் வரும்.
|
|
இனி, கொள்ளாது ஒழிவான் என ஏனையவற்றிற்கும் வரும். இனி, கரியசாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் எனவும் வரும் பெயரெச்சக் குறிப்பு மறை விகற்பமும் அறிக. இனி, சோறு
உண்டாயிருந்தது, சோறு ஆவதாயிருந்தது, என்பனவற்றிற்குச் சோறு இன்றி, சோறு அன்றி என வினையெச்சக்
குறிப்பு மறை ஆதலுங் கொள்க. ‘எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபிற் பொருள்நிலை திரியா
வேற்றுமைச் சொல்லே’ (188) என்று வேற்றுமை எதிர்மறுத்து வரும் எனவே, அவ்வேற்றுமை ஏற்ற சொல் முற்றுச்சொல்லும், ஆதலின், முற்றுச்சொற்கும் மறை வரும் என்பது
கூறினா
|