|
புலவர்.
இது விரைவின்கண் எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் என்கின்றது.
(இ-ள்.) வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற்கிளவி
- எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு படியாக வருகின்ற வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையை, இறந்த காலத்துக்
குறிப்பொடு
கிளத்தல்-தொழில் இறந்திலவேனும்
சொல்லுவான் கருத்து வகையான் தொழில் இறந்தனவாகக்
கருதிக்கூறல், விரைந்த பொருள என்மனார் புலவர்-விரைவு
பொருண்மையை உடைய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) சோறு பாணித்தவழி உண்ணாதிருந்தானைப் போதல் வேண்டும் குறையுடையான் ஒருவன், ‘இன்னும் உண்டிலையோ?’ என்றவழி, ‘உண்டேன், போந்தேன்’ என்னும். உண்ணாநின்றானும், ‘உண்டேன், போந்தேன்’ என்னும். (44)
சிறப்பின்கண்ணும் காலம் மயங்கல்
244.
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.
இது, மிக்கது ஒன்றன்கண்ணே இறப்பும் எதிர்வும் நிகழ்வொடு மயங்கும் என்கின்றது.
(இ-ள்.) மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி-இரு வினைகள் பலவற்றுள்ளும் சிறந்த இருவினைக்கண்ணே நிகழும்
வினைச்சொல்லை நோக்கி, அப்பண்பு குறித்த
வினமுதற்கிளவி-
திரிபின்றிப் பயக்கும் அம்மிக்கதனது பண்பைக் குறித்து
வரும் வினைமுதற் சொல், செய்வது இல்வழி - சுட்டிச்
சொல்லப்படுவதொரு வினைமுதல் இல்லாத இடத்து, நிகழும்
காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே-
நிகழ்காலத்தான் யாப்புறத் தோன்றும் பொருளை
உடைத்தாம், எ-று.
(எ-டு.) தவம் செய்தான், செய்வான்; தாயைக்
|