நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   694
Zoom In NormalZoom Out


 

கொன்றான், கொல்வான்;  என்பன    முதலியன மிக்க வினைச் சொல்.
சுவர்க்கம்  புகாநிற்பன்,  நிரயம்   புகாநிற்பன்  என்பன அவ்வப்பண்பு
குறித்த வினை முதற்கிளவி.  இவை சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமல்,
யாவன்   தவஞ்செய்தான்  அவன்  சுவர்க்கும்  புகும்; யாவன் தாயைக்
கொன்றான் அவன்  நிரயம் புகும்  எனவும்,  ஒருவன் தவம் செய்யின்,
துறக்கம்    புகும்;    ஒருவன்   தாயைக்   கொல்லின்,  ரயம்  புகும்
எனவும் வரும்.
 

இங்ஙனம்  பொதுவகையாற்  கூறாது, சாத்தன் தவஞ்செய்து துறக்கம்
புக்கான்; சாத்தன் தவம்   செய்யின்,  துறக்கம்  புகுவன்   எனச் சுட்டி
ஒருவர்     பெயர்     கொண்டவழி      ஏனைக்     காலங்களான்
கூறப்படுதலின்,   ‘செய்வதில்      வழி’    என்றார்.   வினைச்சொல்
என்றாரேனும்,   தவஞ்  செய்தான்;     தாயைக்   கொன்றான்   என
வினைப்பெயராய்   வருதலுங் கொள்க. (45)
  

இது செயல் வேண்டும் என்பது ஈரிடத்துப் பொருள் தரல்
  

245.

இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.
 

இது, முற்றுச்சொல் பொருள்தரும் வேறுபாடு கூறுகின்றது.
  

இ-ள்.)   இது    செயல்வேண்டும்     என்னும்      கிளவி-இக்
காரியத்தினைச்   செயல்    வேண்டும்,     என்று    சொல்லப்படும்
முற்றுச்சொல், தன்பாலானும்    பிறன்பாலானும்  இருவயின்  நிலையும்
பொருட்டு   ஆகும்மே  -  அக்காரியத்     தினைச்      செய்வான்
தன்னிடத்தும்,   அவன்     செயலை   வேண்டியிருப்பான்    பிறன்
ஒருவனிடத்தும்      என்ற       இரண்டிடத்தும்      நிலைபெறும்
பொருண்மையை உடையதும், எ-று.
 

(எ-டு.)        சாத்தன்       ஓதல்     வேண்டும்     என்புழி,
(வேண்டும் என்னும் முற்றுச்சொல்)    ஒருவழிச்   சாத்தன்    என்பது
எழுவாயாய்     வேண்டும்  என்னும் பயனிலையொடு  முடிந்துழி அவ்