|
வொடும் மயங்கும் என்கின்றது.
(இ-ள்)
வாராக் காலத்து வினைச்சொற்கிளவி-எதிர்காலத்திற்கு உரிய வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மை,
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும்
தெளிவுங்
கிளக்குங்காலை - வழங்கலாற்றான் இஃது இப்பெற்றித்து
எனப் பெற்றியான் அறிந்திருந்த இயல்பாகலும், இது நிகழின்
அது நிகழும் என நூல்நெறியான்
தெளியப் படுதலுஞ்
சொல்லுமிடத்து இறந்தகாலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும்
விளங்கத் தோன்றும், எ-று.
(எ-டு.) இக்காட்டுள் போகின் கூறை கோட்படுவன் எனற்பாலது, கூறை கோட்பட்டான், கூறை கோட்படுகின்றான் எனக் கூறுதல் இயற்கை. எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறியது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது, மழை பெய்தது, மழை பெய்கின்றது எனக் கூறுதல் தெளிவு. (48)
செயப்படுபொருள் வினைமுதல் போல வருதல்
248.
செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே.
இது, வினைச்சொற்கண் மரபுவழுவமைதி கூறுகின்றது.
(இ-ள்.) செயப்படுபொருளை - ஒரு வினைமுதல் ஒரு தொழில்
செய்வதனை உறுவதாகிய பொருளை, செய்ததுபோலத்
தொழிற்படக் கிளத்தலும் - தான் அத்தொழிலினைச் செய்த
வினைமுதல் போல அத்தொழில் அதன்மேற்படக்
கூறுதலும்,
வழக்கியல் மரபே - வழக்கின் கண்ணே நடக்கும் முறைமை, எ-று.
எனவே, இலக்கணம் அன்றாயிற்று.
(எ-டு.) இல்லம் மெழுகப்பட்டது என்னாது, இல்லம் மெழுகிற்று
என்றலாம். இங்ஙனம் வினைமுதல்வாய்பாட்டாற் கிளத்தலே
அன்றி, எளிதின் அடப்படுவதனை நேக்கி, அரிசிதானே
அட்டது எனச் செயப்படுபொருளை வினைமுதலாகக் கூ
|