நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   697
Zoom In NormalZoom Out


கூறலும்   அடங்குதற்குத்     ‘தொழிற்பட     கிளத்தலும்’  என்றார்.
இவை  கருமக்கருத்தா.  

இனி,    ஒன்றென    முடித்தலான்,  இவ்வாள்   எறியும்   எனக்
கருவியைத்   தானே   செய்வதாகக்     கூறும்    கருவிக்கருத்தாவும்,
அரசன்   எடுத்த  ஆலயம்   என    ஏவினானைக்    கருத்தாவாகச் கூறும் ஏதுக்கருத்தாவுங் கொள்க. (49) 

இறப்பும் எதிர்வும் தம்முள் மயங்கல்

249. இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. 

இஃது,  ஒரு   பொருண்மை   குறியாது      இறப்பும்   எதிர்வும்
மயங்கும் என்கின்றது. 

 இறப்பே  எதிர்வே  ஆயிரு   காலமும்   -   இறப்பும் எதிர்வும்
ஆகிய  அவ்விரண்டு   காலமும்,  மயங்கும்  மொழிக்கிளவி  சிறப்பத்
தோன்றும்   -  தம்முள்   மயங்கும் மொழிப்  பொருளாய்  விளங்கத்
தோன்றும், எ-று.
 

(எ-டு.)     இவர்   பண்டு    இப்பொழிலிடத்து   விளையாடுவர்; நாளை    அவன்  வாளொடு    வெகுண்டு   வந்தான்,  பின் நீ என்
செய்குவை? என வரும்.   அவை    வினைப்பெயரும்   வினையுமாய்
மயங்குதலின், மயங்கும் வினைச்     சொற்    கிளவி     என்னாது,
பொதுப்பட ‘மயங்கும் மொழிக்கிளவி’ என்றார். (50) 

நிகழ்வு ஏனையவற்றொடு மயங்கல்

250. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். 

இது, நிகழ்வு ஏனையவற்றொடு மயங்கும் என்கின்றது. 

(இ-ள்.) ஏனைக்  காலமும்  மயங்குதல்  வரையார்-    நிகழ்காலம்
இறப்போடும்  எதிர்வொடும்   மயங்குதலை     நீக்கார்    கொள்வர்
ஆசிரியர், எ-று. 

(எ-டு.)  இவள்  பண்டு  இப்பொழிலிடத்து    விளையாடும்; இவள்
நாளை வரும் என வரும். 

மூன்று காலமும் வினைப்பெயரொடும் மயங்கும்