|
(இ-ள்.)
அவைதாம்-முற்கூறிய இடைச்சொற்கள் தாம், புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்-இரு மொழி தம்மில் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைக்கு உதவிசெய்து வருவனவும், வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் - முதல்நிலை நின்று காரியத்தினைத் தோற்றுவிக்கும் இடத்துக் காலங்காட்டும் இடைச்சொற்களோடே பாலும் இடமும் காட்டும் இடைச்சொற்களாய் வருவனவும், வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்-வேறுபடச் செய்யுஞ் செயப்படுபொருள் முதலாயவற்றின்கண் உருபு ஆகுநவும் - வேறுபடச் செய்யுஞ் செயப்படுபொருள் முதலாயவற்றின்கண் உருபு என்னுங் குறியவாய் வருவனவும், அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்-தமக்கொரு பொருளின்றித் தாஞ் சார்ந்த பெயர் வினைகளை அசையப்பண்ணும் நிலைமையவாய் வருவனவும், இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் - செய்யுட்கண் இசை நிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங்குறிப்பிற் பொருள் செய்குநவும்-கூறுவார் தாந்தாங் குறித்த குறிப்பினானே அவர் குறித்த பொருளை விளக்கி நிற்பனவும், ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும்-கூறுவார் தாந்தாங் குறித்த குறிப்பினானே அவர் குறித்த பொருளை விளக்கி நிற்பனவும், ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும்-நாடகவழக்கினான் உயத்துணரினன்றி உலகியல் வழக்கினாற் காட்டப்படுவதோர் ஒப்பின்றி நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்தி வரும் உவமவுருபுகளும், என்று அப்பண்பினவே நுவலுங்காலை - என்று சொல்லப்பட்ட அவ்வேழியல்பினை யுடைய சொல்லுமிடத்து, எ-று.
|
|
பொருள்நிலைக்குதவுவன, எல்லாம் என்பதனை வற்றுச் சாரியை அஃறிணை யாக்கியும், நம்முச் சாரியை உயர்திணை யாக்கியும் நிற்பன போல்வன. இதனானே, காரம், கரம் முதலிய எழுத்துச் சாரியையுங் கொள்க.
|