|
உண்டு என்னும் எச்சம் முதலியனவும் பாலும் இடமும் உணர்த்தும் என்பது, வந்தான் வந்தது என்னும் வினைகளாற் பெறுதல், ‘பிரிபுவேறு படூஉஞ் செய்திய ஆகி’ (224) என்பதனாற் கொள்க. தன்னினம் முடித்தல் என்பதனான், உண்டவன் என்றாற்போலும் தொழிற்பெயரும், நம்பி, நங்கை என்னும் பெயர்ப்பெயரும், இவ்விடைச்சொற் பெற்று வருதல் கொள்க.
|
|
‘கண்ணகன் ஞாலம்’ (திரிகடு. 154) என்புழிக் கண் இடப் பொருள் உணர்த்துதலும், ‘ஊர்க்கால்’ (கலி. 56:1) என்புழிக் கால் உருபாகலும் முற்கூறினாம். ‘அனையை ஆகன்மாறே’ (புறம். 4:17; 20:20) ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற்.40) என்புழி மாறு என்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின், மூன்றாம் வேற்றுமைப் பொருள் உணர்த்தி நின்றதல்லாமை உணர்க. அது மூன்றாவதன் பொருள் உணத்திற்றேல், ‘கூறாய் தோழி! யாம் வாழுமாறே’ என்புழி வாழுமாற்றை என இரண்டாவது விரியாதாம். ‘மந்திர விதியின் மரபுளி வழா அ’ (மருகு. 45) என்புழி, முறைமையின் வழுவாத அந்தணர் என ஐந்தாவது விரிதலானும், ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள். 545) என்புழி முறைமையிலே செங்கோல் நடாத்தும் என ஏழன் உருபு விரிதலானும், உளி என்பது மூன்றன் உருபின் பொருள்பட வந்தது அன்று; பகுதிப்பொருள் விகுதியாய் நின்று, தனக்கேற்ற உருபை ஏற்று நின்றது. இம்மூன்றும் புணரியலுள்ளும் வினையியலுள்ளும் வேற்றுமை ஓத்தினுள்ளுங் கூறி, இடைநின்ற மூன்றும் ஈண்டுக் கூறுகின்றார். இறுதிநின்ற ஒப்பில் வழியாற் பொருள்செய்யும் உவம உருபுகள், ‘அன்ன ஏய்ப்ப’ (11) என்னுஞ் சூத்திரத்தான் உவம இயலுட் கூறுப. அவை ஒப்பின்றி ஒப்புணர்த்துதல், ‘ஒப்பும் உருவும் வெறுப்பும்
|