நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   704
Zoom In NormalZoom Out


 

குறிப்பதும் என அக்கூற்று எட்டாம், எ-று.
  

எச்சம்  இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இரு வகைத்து.
சாத்தனும்  வந்தான்  என்னும்  உம்மை,  கொற்றனும்  வந்தான், என
எதிரது தழீஇயிற்று. பின் வந்த கொற்றனும் வந்தான் என்பதூஉம், முன்
நின்   சாத்தனும்   வந்தான்   என்பதனைத்  தழுவுதலின்,  இறந்தது
தழீஇயிற்று.  இனி, இவ்விரண்டனையும் இறந்தகாலம் தழீஇயின ஆக்கி,
‘இன்று சாத்தனும் வரும், நாளைக் கொற்றனும் வரும்’ என்பன எதிரது
தழீஇயின என்றுமாம்.
 

இன்னும்   இவ்வெச்சந்தான் யான் கருவூர்க்குச் செல்வல் என்றாற்கு,
யானும்   அவ்வூர்க்குப்  போதுவல்  என  முழுவதூஉம்  தழுவுவதும்,
அவ்வாறு கூறினாற்கு, யானும் உறையூர்க்குப் போதுவல் என ஒருபுடை
தழுவுவதும் என இருவகைத்தாம்.
 

சிறப்பு, யர்வுசிறப்பும்  இழிவுசிறப்பும் என இருவகைத்து. ‘உப்பொடு
நெய்பால்  தயிர்காயம்   பெய்தடினும், கைப்பறா பேய்ச்சுரையின் காய்’
(நாலடி,  116)  ‘குறவரும்  மருளும் குன்றத்துப் படினே’ (மலைபடு.275)
‘ஊர்க்கும்   அணித்தே   பொய்கை’   (குறுந்.113)   என்பன  உயர்வு.
‘அவவூர்ப் பூசையும் புலால் தின்னாது’ என்பது இழிவு.
 

‘ஒன்று,    இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம், புரப்பன்
போல்வதோர் மதுகையு முடையன், வல்லாரை வழிபட்டொன்றறிந் தான்
போல்,   நல்லார்கண்   தோன்றும்  அடக்கமு  முடையன்,  இல்லோர்
புன்கண்   ஈகையின்   தணிக்க,  வல்லான்  போல்வதோர்  வன்மையு
முடையன்,  அன்னான்   ஒருவன்’  (கலி.  47:1-7)  என்புழி, இன்னான்
என்று  துணியாமைக்கண்  வருதலின் ஐயம். ‘பொய்கைக்குச், சேய்த்தும்
அன்றே சிறுகான் யாறே’ (குறுந். 113) என்பதும் அது.
 

சாத்தன்   வருதற்கும் உரியன் என்பது, வாராமைக்கும் உரியன் என
எதிர்மறையை   ஒழிபாக  உடைத்தாய்  நிற்றலின்,  எதிர்மறை.  இஃது,
‘அஃறிணை    விரவுப்பெயர்     இயல்புமாருளவே’   (எ.155)   எனப்
பண்புபற்றியும் வரும். இது பிறிதொரு பொருளினைத்