|
தழுவாது ஒரு பொருளின் வினையை மறுத்து நிற்றலின் எச்சத்தின் வேறு ஆயிற்று. மேல் ஆசிரியர், ‘எதிர்மறை எச்சம்’ (435) என்றமையின் இஃது எச்சத்தின் கூறாம். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார். ‘யாதும் ஊரே’ (புறம்.192:1)
‘நாளும் அன்னான் புகழும் அன்னை’ என்பன முற்றுமை. நிலனும் நீரும் தீயும் வளியும், ஆகாயமும் எனப் பூதம் ஐந்து என்பது எண். ‘மண்திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும்’ (புறம்.2:1-3) என்பதும் அது.
‘இருநிலம் அடி தோய்தலின் திருமகளும் அல்லள்; அரமகளும் அல்லள்; இவள் யாராகும்? என்பது திருமகளோ! அரமகளோ!’ என ஐயுறாது ஆராய்தற்கண் வருதலின், தெரிநிலை. ‘ஐதேய்ந்தன்று பிறையும் அன்று, மைதீர்ந் தன்று மதியும் அன்று, வேயமன் றன்று மலையும் அன்று, பூவமன் றன்று சுனையும் அன்று’ (கலி.55:9-12) என்பதும் அது. நெடியனும் வலியனு மாயினான் என்பது ஆக்கம். ‘செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே’ (5) என்பது, இலக்கணம் ஆக்கிக்கோடல் குறித்தமையின் ஆக்கமுமாம். (7)
‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
258.
பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகா ரம்மே.
இதுவும் அது.
(இ-ள்.) பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக்
கிளவி சிறப்பொடு தொகைஇ இரு மூன்று என்ப ஓகாரம்மே - பிரிநிலைப் பொருண்மை, வினாப்பொருண்மை, எதிர்மறைப்
பொருண்மை, எஞ்சி நின்ற சொற்பொருண்மை, ஆராயும்
நிலைமையை உடைய பொருண்மை என்கின்ற இவற்றை
மிகுதிப் பொருண்மையோடேதொகுத்து, ஓகாரப்
பொருண்மை ஆறு என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) ‘யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.’ (குறுந்.21) -இது தேறுவார் பிறரிற் பிரித்தலின், பிரிநிலை. சாத்தன் உண்டானோ?-இது வினா. யானோ கொள்வேன்? இஃது எதிர்மறை. கொளலோ கொண்டான்-இது, கொண்டு உய்யப்போகலானாயினான் என்றலின், ஒழியிசை. திருமகளோ அல்லள்; அரமகளோ அல்லள்; இவள் யார்?-என்பது தெரிநிலை. ‘ஒஒ! உவமன் உறழ்வின்
|