நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   707
Zoom In NormalZoom Out


தான் இடைநின்று  கருதிப்  பின்வருஞ் சொல்லோடு  இயைவிக்கும்
நிலைமையை யுடைத்து என என்னுஞ் சொல், எ-று. 

(எ-டு.)  கார் வருமெனக் கருதி நொந்தாள்; துண்ணெனத் துடித்தது
மனம்;   ஒல்லென   ஒலித்தது;  வெள்ளென  விளர்த்தது;  நிலனென
நீரெனத்  தீயென  வளியென; ‘அழுக்கா றெனவொரு பாவி’ (குறள்.168)
என  வரும். ‘நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’ (புறம். 243:9)
என்பதும் இசை. (10) 

என்று என்னும் இடைச்சொல்லின் பொருள்

261. என்றென் கிளவியும் அதனே ரற்றே. 

இதுவும், அது. 

(இ-ள்.)    என்று என் கிளவியும் அதனோரற்றே - என்று என்னும்
இடைச்சொல்லும்  என  என்பதுபோல அவ்  வாறு பொருளுங் குறித்து
வரும், எ-று. 

(எ-டு.)     ‘நரைவருமென் றெண்ணி’  (நாலடி. 11) விண்ணென்று
விசைத்தது,  ‘ஒல்லென்  றொலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம்.28),
பச்சென்று  பசத்தது,  நிலனென்று  நீரென்று,  பாரியென்  றொருவன்
உளன், என வரும். (11) 

தில் என்பதற்குப் புறனடை

262. விழைவின் தில்லை தன்னிடத் தியலும். 

இது, முற்கூறிய தில் என்பதற்குப் புறனடை கூறுகின்றது. 

(இ-ள்.)   விழைவின் தில்லை தன்னிடத்து இயலும்-‘அம்மூன்றென்ப
தில்லைச்  சொல்லே’  (255)  என்ற  மூன்றனுள்  விழைவின்கண் வருந்
தில்லை தன்மைக்கண் அல்லது வாராது, எ-று. 

(எ-டு.)     ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில்   அம்ம   யானே.’  (குறுந்.14)  எனவே,  ஏனைய,  எல்லா
இடத்திற்கும் உரியவாயின. (12) 

ஏ ஓ என்பவற்றிற்குப் புறனடை

263. தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப. 

இஃது, ஏகார ஓகாரங்கட்குப் புறனடை கூறுகின்றது. 

(இ-ள்.)  தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய
என்ப  -  முற்கூறிய  தெளிவின்கண்  வரும்  ஏகாரமும் சிறப்பின்கண்
வரும் ஓகாரமும் இரண்டு மாத்திரையின் மிக்கு மூன்று மாத்திரையினை
உடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. 

(எ-டு.) உண்டேஎ  மறுமை. ‘ஓஒ! உவமன்  உறழ்வின்றி  ஒத்ததே!’
(களவழி. 36) என வரும். (13) 

மற்று என்னும் இடைச்சொல்லின் பொருள்

264. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
அப்பால் இரண்டென மொழிமனார் புலவர். 

இது, பொருள்படுமாறும் அசை