|
ரம் முதலியன போலச் சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டு இசையாது தொடர்மொழி முதற்கட் பிரிந் திசைத்தலின் வேறு கூறினார். (24)
மா என்னும் இடைச்சொல் வருமாறு
275. மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல்
இஃது, அசைநிலை கூறுகின்றது.
(இ-ள்.)
மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்-மா என்னும் இடைச்சொல் பெரும்பான்மை வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும், எ-று.
(எ-டு) ‘புற்கை உண்கமா கொற்கை யோனே!’ என வரும். (25)
முன்னிலை அசைச்சொற்கள்
276.
மியாஇக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயி னாறும் முன்னிலை அசைச்சொல்.
இதுவும் அது.
(இ-ள்.) மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும்-மியா, இக, மோ, மதி, இகும், சின் என்று சொல்லப்பட்ட அவ்விடத்து இடைச்சொல் ஆறும், முன்னிலை அசைச் சொல் - முன்னிலைப் பொருளை உணர்த்தும் அசைச்சொல்லாம் எ-று.
(எ-டு.) கேண்மியா, சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக என்றி தோழி!’ எனவும், ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ.’ (குறுந்.2) எனவும், ‘உரைமதி வாழியோ வலவ!’ எனவும், ‘மெல்லம் புலம்ப! கண்டிகும்’ எனவும், ‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை.’ (அகம். 7:5) எனவும் வரும். (26)
இகும், சின் என்பவற்றிற்குப் புறனடை
277.
அவற்றுள்,
இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும்
தகுநிலை யுடைய என்மனார் புலவர்.
இது, மேலதற்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்.)
அவற்றுள் இகுமும் சின்னும்- முற்கூறிய ஆறனுள் இகுமுஞ்சின்னும், ஏனை
இடத்தொடும் தகுநிலை உடைய என்மனார்
புலவர் - ஒழிந்த தன்மைச் சொல்லொடும் படர்க்கைச் சொல்லொடும் பொருந்தும் நிலைமையுடைய என்று கூறுவர் புலவர், எ-று.
(எ-டு.) ‘கண்டிகும் அல்லமோ!’ (ஐங்குறு. 121) ‘கண்ணும் படுமோ என்றிசின்
யானே, (நற்.61) எனத் தன்மைக்கண்ணும், ‘புகழ்ந்திகும் அல்லரோ
பெரிதே.’ ‘யாரஃதறிந்திசி னோரே’ (குறுந்.18) எனப்
|