நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   716
Zoom In NormalZoom Out


னீற் றோவும்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். 

இதுவும் அது.  

(இ-ள்.)     நன்று  ஈற்று ஏயும்-நன்றினது ஈற்றின்கண் வந்த ஏயும்,
அன்று  ஈற்று   ஏயும்  -  அன்றினது ஈற்றின்கண் வந்த ஏயும், அந்து
ஈற்று   ஓவும் - அந்தினது ஈற்றின்கண் வந்த ஓவும், அன் ஈற்று ஓவும்
-  அன்னினது   ஈற்றின்கண் வந்த ஓவும், அன்ன பிறவுங் குறிப்பொடு
கொள்ளும்-அவை   போல்வன   பிறவுஞ்  சொல்லுவான்  குறிப்பொடு
பொருள் உணர்த்தி நிற்கும், எ-று. 

ஒருவன்,     ‘கொலை,  களவு, கள், காமம், பொய் என்பனவற்றை
விரும்புக,’   என்றவழி,   ‘அவற்றை  விரும்புதல்  நன்றே’!  என்றால்,
மேவாமைக்     குறிப்பு        உணர்த்தும்.     ‘நின்றே     எறிப
பறையினை-நன்றேகாண்’   (நாலடி.24)  என்பது,  தீது என்னும் குறிப்பு
உணர்த்தும்.  இஃது  ஊழன்றே! என்றால், அஃது இங்ஙன் நுகர்வியாது
ஒழியுமோ? என்னுங் குறிப்பு உணர்த்தும். ‘அந்தோ! எந்தை அடையாப்
பேரில்’   (புறம்.261:1)   ‘அன்னோ!   என்னா   வதுகொல்   தானே!’
(புறம்.345:18,19)   என்பன   இரக்கக்குறிப்பு  உணர்த்தும்.  இவ்வேகார
ஓகாரங்கள்   பல   சொல்லோடு   அடுத்துவாராது  இச்சொற்களையே
அடுத்துப்  பொருள்  வேறுபட்டு  நிற்றலின்,  அவற்றைப் பெயர் தந்து
வேறு கூறினார். 

அன்ன     பிறவும் என்றதனான், ‘அன்னா! அலமரும் ஆருயிரும்’
என்புழி  அன்னா  இரக்கக்  குறிப்பு  உணர்த்துதல்  கொள்க. இதனை
ஓகாரம்  ஆகாரமாய்த்  திரிந்தது  என்றலுமாம்..  ‘ஏயே இவளொருத்தி
பேடியோ  என்றார்’   (சீவக. 652) என ஏகாரத்தின் பின்வந்த ஏ இழிபு
உணர்த்துதலும்   ‘அஆ  இழந்தான்!’  (நாலடி.9)  எனவும், ‘ஐயாவென்
ஐயாவென்  ஐயா   அகன்றனையே!’  (சீவக.1802)  எனவும்,  ஆவம்மா
அம்மாவென்  அம்மா  அகன்றனையே! (சீவக. 1804) எனவும் ஆகாரம்
இரக்கக்குறிப்பு உணர்த்துதலும், பிறவுங் கொள்க. (34) 

உம்மைகள் மயங்குமாறு

285. எச்ச வும்மையும் எதிர்மறை யும்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை யிலவே. 

இது, முற்கூறிய உம்மைகள் மயங்கும் என்கின்றது. 

(இ-ள்.) எச்ச உம்மையும் -