நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   726
Zoom In NormalZoom Out


தலுங்   கொள்க.   பிறவுஞ்   செய்யுட்கண்   வேறுபடுவன  எல்லாம்
இதனான் அமைத்துக்கொள்க.          (47) 

இடைச்சொற்களுக்குச் சொற்புறனடை

298. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினுங்
களந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. 

இஃது, அவற்றிற்குச் சொற்புறனடை கூறுகின்றது. 

(இ-ள்) கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்-மேல் சார்பும் இடமுங்
குறிப்பும்பற்றிச்    சொல்லப்பட்டன   அன்றி  வேறு   பிற  வரினும்,
கிளந்தவற்று     இயலான்     உணர்ந்தனர்    கொளல்-அவற்றையும்
அச்சொற்களின்    மூவகை    யவாகக்    கூறிய    இலக்கணத்தான்
உணர்ந்துகொள்க, எ-று. 

(எ-டு.)     ‘சிறிது   தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ என
மாளவும்,   ‘சொல்லேன்   தெய்ய   நின்னொடு   பெயர்ந்தே’  எனத்
தெய்யவும், ‘அறிவார்  யாரஃதிறுவழி யிறுகென’ என எனவும், ‘அஞ்சுவ
தோரும்  அறனே’  (குறள்.  366)  என  ஓரும், ‘செலியர் அத்தைநின்
வெகுளி’  (புறம்.6:23)  என அத்தையும், ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’
என ஈகாரமும்,   ‘காதனன்மா நீமற் றிசினே’ என இசினும், ‘பணியுமாம்
என்றும்  பெருமை’  (குறள்.  978)  என  ஆமும்,  ‘ஈங்கா  யினவால்
என்றிசின்   யானே’ (நற். 55) என ஆலும், ‘புனற் கன்னிகொண்டிழிந்த
தென்பவே’   (சீவக. 39)  என  என்பவும்,  ‘சேவடி சேர்தும் அன்றே’
(சீவக.1) என அன்றும் அசைநிலையாய் வந்தன. 

குன்றுதொ   றாடலும் நின்றதன் பண்பே’ (முருகு.217) எனத் தொறு,
தான்  சார்ந்த  மொழிக்குப்   பன்மையும் இடமும் உணர்த்திற்று. இது,
‘நாடோறும் நாடி’ என நீண்டும் நிற்கும். 

ஆ   என்பது,   வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும் பொரு
ளுணர்த்துதலும்,   ஐ என்றது, இசை உள்வழியும் வருத்தம் உள்வழியும்
பொருளுணர்த்துதலுங் கொள்க. 

பொள்ளென,  பொம்மென, கதுமென-இவை   விரவு   உணர்த்தின.
கொம்மென என்பது பெருக்கம் என்