|
என்பது சூத்திரம். இது, தமக்கு இயல்பில்லா இடைச்சொற்
போலாது, இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரியவாய் வருதலின், உரிச்சொல் எனப்பட்டது. உரிச்சொல் இலக்கணம் உணர்த்தினமையான் இவ்வோத்து ‘உரிச்சொல் ஓத்து’ என்னும் பெயர்த்தாயிற்று. ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலும் இன்றிப்
பெயரையும் வினையையுஞ் சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின்,
உரிச்சொல், பெயரின் வேறென்று உணர்க. இச்சூத்திரம்,
உரிச்சொற்கெல்லாம் பொது இலக்கணங் கூறுகின்றது.
|
|
உரிச்சொற்கிளவி விரிக்குங்காலை - உரிச்சொல்லாகிய சொல்லை விரித்து உணர்த்துமிடத்து, ஒருசொற் பல பொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் - அஃது ஒருசொல் ஒருபொருட்கு உரித்தாய் வாராது பல பொருட்கு உரித்தாய்
மயங்கிவரினும் பலசொல் ஒருபொருட்கு உரியவாய் மயங்கிவரினும், இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினயினும் மெய்தடுமாறித் தத்தம் மரபிற் சென்று நிலைமருங்கின்-இசைப் பொருண்மைக்கண்ணும் மனத்தாற் குறித்து உணரும் பொருண்மைக்கண்ணும் பண்புப் பொருண்மைக்கண்ணும் வெளிப்பட்டுப் பெயர் வினைகள் போன்றும் அவற்றிற்கு முதல்நிலையாயும் தம் உருவு தடுமாறித் தத்தமக்கு உரிய முறைமையாற் சென்று நிற்கும் நிலைக்களங்களானே, எச்சொல்லாயினும் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல்-கேட்போனாற் பொருளுணரப்படாத எவ்வ
|