|
கைப்பட்ட சொல்லாயினும் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றொடு சேர்த்திப் பொருளை வேறுவேறு சொல்லுக, எ-று.
‘அது மயங்கிவரினும், நிலைக்களங்களானே சேர்த்தி வேறுவேறு கிளத்தல்,’ என வினைமுடிபு செய்க.
பண்பு, பொறியான் அறியப்படுங் குணம்.
கறுப்பு, பெயர்ப்போலி. தவ, வினைப்போலி. துவைத்தல், பெயர்க்கு முதனிலை. தாவாத, வினைக்கு முதனிலை.
பலவும் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணம் மூவகைப் பொருளும்பற்றி வருதலேயாம். (1)
வெளிப்படை அல்லா உரிச்சொற்கே பொருள் கூறுதல்
300. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா;
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.
இஃது, உரிச்சொற்களுள் யான் கூறப்படுவன இவை என்கின்றது.
(இ-ள்.) வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா-பொருள் புலப்பட்ட உரிச்சொற்கள் எல்லாரும் அறிதலின் எடுத்தோதிப் பொருளுணர்த்துதல் வேண்டா; வெளிப்பட வாரா உரிச்சொல் மேன - பொருள் புலப்பட வாராத உரிச்சொல் மேலன யான் பொருள் புலப்பட ஓதுதல், எ-று. (2)
உறு, தவ, நனி என்பவற்றின் பொருள்
301.
அவைதாம்,
உறுதவ நனியென வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப.
இது, குறிப்புப்பற்றி வரும் உரிச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
அவைதாம் - வெளிப்பட வாராத உரிச்சொற்கள் தாம் (யாவை? எனின்) உறு தவ நனி என வரூஉம் மூன்றும்-உறுவெனத் தவவென நனியென வருகின்ற மூன்று உரிச்சொற்களும், மிகுதி செய்யும் பொருள என்ப - மிகுதி என்னும் உரிச்சொல் காட்டுங் குறிப்புப் பொருளை உடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
குறிப்புச்சொல் பரப்புடைமையின், முற்கூறினார்.
(எ-டு.) ‘உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்’ (நற்.300) ‘ஈயாது
வீயும் உயிர் தவப் பலவே’ (புறம் 235:20) ‘வந்துநனி வருந்தினை
வாழிய* நெஞ்சே!’ (அகம்.19:1.2) என வரும். (3)
* (பாடம்) வாழியென்
உரு, புரை என்பவற்றின் பொருள்
302.
உருவுட் காகும் புரைஉயர் வாகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
உரு உட்கு ஆகும் - உரு என்னும் உரிச்சொல் உட்குதல் என்னும் உரிச்சொல்லது குறிப்புப்பொருட்டாம்; புரை உயர்வு ஆகும் - புரை என்னும் உரிச்சொல் உயர்வு என்னும்
|