|
குறிப்பினையும்
உவப்பு உவகை என்னுங்
குறிப்பினையும்
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘விசும்புகந் தாடா திரைதேர்ந் துண்ணாது.’ ‘உவந்துவந்’
தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇ’ (அகம். 35:11, 12) என வரும்.
(8)
பயப்பு என்பதன் பொருள்
307. பயப்பே பயனாம்.
இதுவும் அது.
(இ-ள்.)
பயப்பே பயனாம் - பயப்புப் பயன்
என்னும் குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘பயவாக், களநனையர் கல்லா தவர்.’ (குறள்.406) என வரும். (9)
பசப்பு என்பதன் பொருள்
308.
பசப்புநிறன் ஆகும்.
இது பண்பு.
(இ-ள்.)
பசப்பு நிறன் ஆகும் - பசப்பு நிறன்
என்னும் பண்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே.’
(கலி. 7:8) என வரும்.
(10)
இயைபு என்பதன் பொருள்
309. இயைபே புணர்ச்சி.
இது குறிப்பு.
(இ-ள்)
இயைபே புணர்ச்சி - இயைபு கூட்டம் என்னும்
குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘வளன்வலி யுறுக்கும் உளமி லாளரோ, டியைந்த
கேண்மை
இல்லா கியரோ! (புறம். 190:4,5) என வரும். (11)
இசைப்பு என்பதன் பொருள்
310. இசைப்பிசை யாகும்.
இஃது இசை கூறுகின்றது.
(இ-ள்.)
இசைப்பு இசையாகும்-இசைப்பு
இசைப் பொருண்மையை
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘வாயிற் றோன்றி யாழிசையூப் புக்கு’ என வரும். (12)
அலமரல், தெருமரல் என்பவற்றின் பொருள்
311. அலமரல் தெருமரல்ஆயிரண்டுஞ்
சுழற்சி.
இது குறிப்பு.
(இ-ள்) அலமரல்
தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி-அலமரல் தெரு
மரல் ஆகிய அவ்விரண்டும் மனத்தடுமாற்றமாகிய குறிப்பு
உணர்த்தும்,
எ-று.
(எ-டு.)
‘அலமரல் ஆயம்’ (ஐங்குறு.64) ‘தெருமரல்
உள்ளமோ
டன்னையும் துஞ்சாள்’ என வரும். உலமரல்
சொற்புறனடையாற் (389)
கொள்க. (13)
மழ, குழ என்பவற்றின் பொருள்
312. மழவும் குழவும் இளமைப் பொருள.
இதுவும் அது.
(இ-ள்.)
மழவும் குழவும் இளமைப் பொருள - மழவும் குழவும்
இளமை என்பதன் குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று.
(எ-டு.) ‘வரைபுரையும்
மழகளிற்றின்மிசை’ (புறம். 38:1) ‘உருவக்
குதிரை மழவர் ஓட்டிய’ (அகம். 1:2)
‘தடமருப் பெருமை மடநடைக்
குழவி.’ (நற். 120) என வரும். (14)
சீர்த்தி, மாலை என்பவற்றின் பொருள்
313. சீர்த்தி மிகுபுகழ் மாலை இயல்பே.
இதுவும் அது.
(இ-ள்)
சீர்த்தி மிகுபுகழ் மாலை இயல்பே - சீர்த்தி மிகு புகழும்,
மாலை இயல்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘வயக்கஞ்சால்
சீர்த்தி.’ ‘இரவரல் மாலையனே (குறிஞ்சிப்.
239) என வரும். 15)
கூர்ப்பு, கழிவு என்பவற்றின் பொருள்
314. கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்
இதுவும் அது.
|