நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   733
Zoom In NormalZoom Out


(இ-ள்.) கூர்ப்பும் கழிவும் உள்ளது  சிறக்கும் -  கூர்ப்பும்  கழிவும்
முன் சிறவாது உள்ளது ஒன்று சிறத்தலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘இயங்கா  வையத்து   வள்ளியோர்   நசைஇத்,   துனிகூர்
எவ்வமொடு’  (சிறுபாண். 38, 39)  ‘சினனே காமம்  கழிகண்ணோட்டம்’
பதிற் 22:1) என வரும். (16)
 

கதழ்வு, துனைவு என்பவற்றின் பொருள்

315. கதழ்வும் துனைவும் விரைவின் பொருள 

இதுவும் அது. 

(இ-ள்.) கதழ்வும் துவைும் விரைவின்  பொருள-கதழ்வும்  துனைவும்
விரைவு என்னுஞ் சொல்லினது குறிப்புடைய, எ-று.
 

(எ-டு.) ‘அண்டர், கயிறரி எருத்தின்  கதழும்  துறைவன்.’ (குறுந்.17)
‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் ’(அகம்.9.16) என வரும். (17)
 

*(பாடம்) துனையும் 

அதிர்வு, விதிர்ப்பு என்பவற்றின் பொருள்

316. அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும். 

இதுவும் அது. 

(இ-ள்.)  அதிர்வும்  விதிர்ப்பும்  நடுக்கம்  செய்யும்  -  அதிர்வும்
விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘அதிர  வருவதோர் நோய்’ (குறள். 429) ‘ விதிர்ப்புற லறியா
வேமக் காப்பினை’ (புறம்.20:19) என வரும். (18)
 

வார்தல், போகல், ஒழுகல் என்பவற்றின் பொருள்

317. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.
 

இது பண்பு. 

(இ-ள்.) வார்தல்  போகல்   ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும்
செய்யும்  பொருள  -  வார்தல்,  போகல்,  ஒழுகல்  என்னும்  மூன்று
சொல்லும்  நேர்மையும்  நெடுமையும் உணர்த்தும் பண்பினைத் தமக்குப்
பொருளாக உடைய, எ-று.
 

(எ-டு.) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையை (குறுந்.
14)  ‘தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை’ (அகம். 34:7) எனவும்,
‘போகுகொடி   மருங்குல்.’ ‘திரிகாய்  விடத்தரொடு*  காருடை  போகி’
(பதிற்.13:14)   எனவும்,  ‘ஒழுகு கொடி மருங்குல்.’ ‘மால்வரை  ஒழுகிய
வாழை’ (சிறுபாண்.21) எனவும் வரும்.
 

* (பாடம்) விடத்தேரொடு 

தீர்தல், தீர்த்தல் என்பவற்றின் பொருள்

318. தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். 

இது குறிப்பு. 

(இ-ள்.)  தீர்தலும்   தீர்த்தலும்  விடற்பொருட்  ஆகும் - தீர்தலும்
தீர்த்தலும்  விடல்  என்னும்  உரிச்சொல்லது  குறிப்புப்  பொருண்மை
உடையவாம், எ-று.
 

(எ-டு.) ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற்.108) ‘நங்கை