|
என்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று.
(எ-டு.) கயந்தலை மடப்பிடி’ (நற். 137) என வரும். (24)
நளி என்பது செறிவையும் உணர்த்தல்
323. நளியென்
கிளவி செறிவும் ஆகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
நளி என் கிளவி செறிவும் ஆகும்-நளி என்னுஞ் சொல்
செறிவு என்னுங் குறிப்பினையும் உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை *
தந்துநீ, நளிந்தனை
வருதல் உடன்றன ளாகி’ (பதிற்.52:15,16) என வரும்.
(25)
* (பாடம்) லேற்றித் தலைக்கை.
பழுது என்பதன் பொருள்
324. பழுதுபயம் இன்றே.
இது குறிப்பு.
(இ-ள்.)
பழுது பயம் இன்றே - பழுது பயம் இன்மையாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘பழுதுகழி
வாழ்நாள்’ என வரும். பழுது
குற்றத்தை
உணர்த்து தல் வழக்கு. (26)
சாயல் என்பதன் பொருள்
325. சாயல் மென்மை
இது பண்பு.
(இ-ள்.) சாயல் மென்மை-சாயல் என்னுஞ் சொல் மெய், வாய், கண்,
மூக்கு, செவி என்னும் ஐம்பொறியான்
நுகரும் மென்மையை
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘மயிற்சாயல்
மகள் வேண்டிய’ (பு.வெ.மா.கொளு) ‘சாயல்
மார்பு நனியலைத் தன்றே’ (பதிற்றுப். 16:20)
என இவை ஒளியானும்
ஊற்றானும் பிறந்த மென்மை உணர்த்தின. ‘அமிர்தன்ன சாயல்’ (சீவக.8)
என்பது, தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல்
தடுக்கும் மென்மையை
உணர்த்தவே, பல மென்மையும் அடங்கின ஒழிந்தன, வந்துழிக் காண்க.
(27)
முழுது என்பதன் பொருள்
326. முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே.
இது குறிப்பு.
(இ-ள்.) முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே-முழுது
என்னுஞ்
சொல் எஞ்சாமையாகிய குறிப்பு உணர்த்தும் எ-று.
(எ-டு.) ‘மண்முழு தாண்டநின் முன்னோர் போல’ என வரும். (28)
வம்பு என்பதன் பொருள்
327. வம்புநிலை யின்மை.
இதுவும் அது.
(இ-ள்.)
வம்பு நிலையின்மை-வம்பு நிலையின்மையாகிய
குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
வம்ப மாரியைக் காரென மதித்தே’ (குறுந்.66) என வரும்.
(29)
* (பாடம்) வம்பு
மாதர் என்பதன் பொருள்
328. மாதர் காதல்.
இதுவும் அது.
(இ-ள்.)
மாதர் காதல் - மாதர் காதல்
என்னுங் குறிப்பினை
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘மாதர்கொள் மானோக்கின்
மடநல்லாய்’ (கலி.56:17) என
வரும். (30)
நம்பு, மே என்பவற்றின் பொருள்
329. நம்பும் மேவும் நசையா கும்மே.
இதுவும் அது.
(இ-ள்.)
நம்பும் மேவும் நசையா
கும்மே - நம்பும் மேவும் நசை
என்னுங் குறிப்பினை உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’
|