|
உணர்த்துதல் ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (51)
அழுங்கல் இரக்கமுங் கேடும் உணர்த்தல்
350. அவற்றுள்,
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.
இஃது, எய்தியதன்மேல் சிறப்பு விதி.
(இ-ள்.)
அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்-அந்நான் கனுள், அழுங்கல் அரவமே அன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘பழங்க ணோட்டமும் நலிய அழுங்கின னல்லனோ அயர்ந்ததன் மணனே, (அகம்.66:25-6) ‘குணனழுங்கக், குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு’ (நாலடி.353) என வரும்.
(52)
கழுமு என்பதன் பொருள்
351. கழுமென் கிளவி மயக்கமுஞ் செய்.யும்
இது குறிப்பு.
(இ-ள்.)
கழுமு என் கிளவி மயக்கம் செய்யும் -கழுமு என்னுஞ் சொல் மயக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.)‘கழுமிய ஞாட்பினுள் மைந்திழந்தார்* இட்ட’
(களவழி.11) என வரும்.
இது, ‘கழும முடித்துக் கண்கூடு கூழை’ (கலி.56:3) எனத் திரட்சியை உணர்த்துதல், ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (53)
*(பாடம்) மைந்திழைத்தார்
செழுமை என்பதன் பொருள்
352. செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும்-செழுமை வளனுங் கொழுப்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘செழுஞ்செய்ந் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்.’‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ என வரும்.
‘வளத்தொடு கொழுப்பிடை வேற்றுமை என்னை?’ எனின், வளம் என்பது, ஆக்கம்; கொழுப்பு என்பது, ஊன் தொடக்கத்தனவற்றது நிணங்கோடலிழுதிருப்பு. (54)
விழுமம் என்பதன் பொருள்
353.
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.
இதுவும் அது.
(இ-ள்.)
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் - விழுமஞ் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159) ‘வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம்.27:3) ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ (அகம்.170:13) என வரும். (55)
கருவி என்பதன் பொருள்
354. கருவி தொகுதி.
இதுவும் அது.
(இ-ள்.)
கருவ தொகுதி-கருவி தொகுதியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று,
உணர்த்துங்கால் பலவற்றது கூட்டத்தை விளக்கும்.
(எ-டு-) ‘கருவி வானம் கதழுறை சிதறி’ (அகம். 4:6) என வரும். ஆண்டு மின்னும் முழக்கும் காற்றும் என்பன இத்தொகுதி. (56)
கமம் என்பதன் பொருள்
355. கமம் நிறைந் தியலும்.
இதுவும் அது.
(இ-ள்.)
கமம் நிறைந்து இயலும் -
|