நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   741
Zoom In NormalZoom Out


கமம் நிறைவாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதி  நிறைந்து  இயலும், எனப்
பொருளின் தொழிலைச் சொன்மேல் ஏற்றினார்.  

எ-டு. ‘கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை’ (முருகு.7) என வரும்.

                                                    (57)

அரி என்பதன் பொருள்

356. அரியே ஐம்மை. 

இதுவும் அது.

(இ-ள்)  அரியே ஐம்மை-அரி ஐம்மையாகிய குறிப்பு உணர்த்தும்,
எ-று. 

(எ-டு.) ‘அரிமயிர்த் திரண்முன்கை’ (புறம்.11:1) என வரும். (58) 

கவவு என்பதன் பொருள்

357. கவவகத் திடுமே. 

இதுவும் அது. 

(இ-ள்.)   கவவு அகத்திடுமே  -  கவவு   அகத்தீடாகிய  குறிப்பு
உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள்’ (குறுந்.132) என
வரும்.  இது, ‘கழூஉவிளங்* காரம் கவைஇய மார்பே’ (புறம். 19:18) என எச்சமாங்கால் திரிந்து நிற்கும்.              (59) 

* (பாடம்) கழுவிளங் 

துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் : பொருள்

358. துவைத்தலுஞ் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனார் புலர்.
 

இஃது இசை. 

(இ-ள்.)    துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கம் இசைப்
பொருட்கிளவி  என்மனார்  புலவர்  -  துவைத்தல்  முதலிய நான்கும்
இசைப்பொருளை  உணர்த்துஞ்  சொல்லாம்  என்று  கூறுவர்  புலவர்,
எ-று. 

(எ-டு.)  ‘முரசுகடிப்  பிகுப்பவும்  வால்வளை  துவைப்பவும்’ (புறம்
158:1) ‘ஆமா  நல்லேறு  சிலைப்ப’  (முருகு. 315)   ‘கடிமரம்  தடியும்
ஓதை*  தன்னூர்,  நெடுமதில்   வரைப்பிற்  கடிமனை  இயம்ப’ (புறம்.
36:9, 10) ஏறிரங்  கிருளிடை   இரவினிற்  பதம்பெறாஅன்’ (கலி.46:10)
என வரும். (60)  

* (பாடம்) ஓசை

இரங்கல் கழிவாகிய குறிப்பும் உணர்த்தல்

359. அவற்றுள்,
இரங்கல், கழிந்த பொருட்டும் ஆகும். 

இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி.

(இ-ள்.)  அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் -அந்நான்
கனுள்  இரங்கல்  இசையே  அன்றி  ஒரு  பொருளது கழிவான் பிறந்த
வருத்த மாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. 

(எ-டு.)   ‘செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்’ (புறம். 10:11)
என  வரும்.  இஃது,  ‘இனிநினைந் திரக்க மாகின்று’ (புறம்.243:1)  என
இரக்கம் எனவும் நிற்கும், உம்மை, இறந்தது தழீஇயிற்று. (61) 

இலம்பாடு, ஒற்கம் என்பவற்றின் பொருள்

360. இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை. 

இதுவும் அது. 

(இ-ள்.)  இலம்பாடு  -  இலம்   என்னுஞ்  சொல்  குறிப்புச்சொல்
தன்மைப்பட்டு இன்மை