நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   742
Zoom In NormalZoom Out


என்னும்    உரிச்சொல்லாய் நின்றதுவும், ஒற்கம் - ஒற்கம் என்னும் உரிச்சொல்லும்,  ஆயிரண்டும்  வறுமை  -  ஆகிய  அவ்  விரண்டும்
வறுமை என்னும் உரிச்சொற்பெயரது குறிப்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.)  ‘இலம்படு  புலவர்  ஏற்றகைந்  நிறைய’  (மலைபடு. 576)
‘ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்’ (புறம். 327:5) என வரும். 

இலம்படு  புலவர் என்பதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவர் என
அல்வழியாகப் பொருளுரைக்க.  இதற்கு   உரையாசிரியர்,  இலத்தான்
பற்றப்படும்  புலவர் என வேற்றுமையாகப் பொருள் கூறினாராலெனின்,
ஆசிரியர்,  ‘அல்வழி  எல்லாம்  மெல்லெழுத்  தாகும்’  (எ.314)  என
அல்வழியே  கூறத்  தொடங்கி, ‘அகமென் கிளவிக்குக் கைமுன் வரின்’
(எ.315)  எனப்  பண்புத் தொகையும், ‘இலமென் கிளவிக்கு (எ.316) என
அல்வழிக்கண்     வரும்     உரிச்சொல்லுங்     கூறிப்,    பின்னர்
எண்ணுப்பெயரும்    அளவுப்   பெயரும்   நிறைப்பெயருங்   கூறிப்,
‘படர்க்கைப்    பெயரும்’    (எ.    320)   என்னுஞ்   சூத்திரத்தின்
வேற்றுமையாயின்  என மீட்டும் வேற்றுமையை எடுத்து ஓதினமையின்,
இலம் என்பதனை வேற்றுமை என்றல் பொருந்தாமை உணர்க. 

இலம்   என்னுஞ்  சொல்,  யாம்  பொருள்  இலம்  என  முற்றுச்
சொல்லாயும்,    ஒருகால்    உரிச்சொல்லாயும்    நிற்கும்    என்பது
உணர்த்துதற்கு  இலத்திற்கு  உரிச்சொல்  தன்மைப்பட்டு  நிற்குமிடத்து
என்றார்.   ‘இலமென்   கிளவிக்குப்   படுவருகாலை’   (எ.316)   என
நிலைமொழி  வருமொழி செய்து முன்னர் ஆசிரியர்  புணர்த்தமையின்,
இலம்பாடு  என  ஒரு  சொல்லாக ஓதாமை உணர்க. ‘இலம்படு நாணுத்
தரும்   (சிலப்.9:71)   என்றதோ   எனின்   இல்லாமை   உண்டாதல்
நாணுத்தரும், எனப் பொருள் கூறிக் கொள்க.  (62) 

ஞெமிர்தல், பாய்தல் என்பவற்றின் பொருள்

361. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள

இதுவும் அது. 

(இ-ள்.)  ஞெமிர்தலும்  பாய்த்தலும் பரத்தற்பொருள-ஞெமிர்தலும்
பாய்தலும் பரத்தலாகிய குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று. 

(எ-டு.)     ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடுநல்.90.)
‘புண்ணுமிழ்  குருதி  முகம்பாய்ந் திழிதர’ (குறிஞ்சிப். 172) என வரும்.
(63)

கவர்வு என்பதன் பொருள்

362. கவர்வுவிருப் பாகும்.   

இதுவும் அது. 

(இ-ள்) கவ