|
கவர்வு விருப்பாகும் - கவர்வு விருப்பாகிய
குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘கவர்நடைப் புரவி’ (அகம். 130:10) என வரும்.
இனி, ‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ (அகம்.3)
என கைக்கொள்ளுதல், ‘கூறிய கிளவி’ (எ.390) என்பதனாற் கொள்க. ‘கருமறிக் காதிற் கவையடிப் பேய்மகள்’ (சிறுபாண். 197) எனக் கவைத்தல் சொற்புறனடை யாற் கொள்க. (64)
சேர் என்பதன் பொருள்
363. சேரே திரட்சி.
இதுவும் அது.
(இ-ள்)
சேரே திரட்சி-சேர் திரட்சியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘சேர்ந்துசெறி குறங்கின்’ (நற்.70) என வரும்.
(65)
வியல் என்பதன் பொருள்
364.
வியலென் கிளவி அகலப் பொருட்டே.
இதுவும் அது.
(இ-ள்.)
வியலி என் கிளவி அகலப் பொருட்டே - வியல் என்னுஞ் சொல் அகலமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘இருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின்று’ என வரும்.
இது, ‘வியன்றானை விறல்வேந்தே!’ (புறம்.38:4)
எனத் திரிந்தும்
நிற்கும்.
(66)
பேம், நாம், உரும் என்பவற்றின் பொருள்
365. பேம்நாம்* உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.
இதுவும் அது.
(இ-ள்.)
பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும்
அச்சப்பொருள -பேம், நாம், உரும் என்று சொல்ல வருகின்ற
கிளவியாகிய அம்முறைமையினையுடைய மூன்றும் அச்சம் என்னும்
உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று.
(எ-டு.) ‘மன்ற மராஅத் பேஎம்முதிர் கடவுள்’ (குறுந். 87) ‘நாம நல்லாரக்
கதிர்பட வுமிழ்ந்த’
(அகம்.72) ‘உருமில் சுற்றமொடு’ (பெரும்பாண்.447)
என வரும். நாம் நாமம் எனத் திரிந்து வழங்கிற்று. (67)
* (பாடம்) பேஎநாம்
வய என்பதன் பொருள்
366. வயவலி ஆகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
வய வலி ஆகும்-வய வலியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
வாள் என்பதன் பொருள்
367.
வாள்ஒளி ஆகும்.
இது பண்பு.
(இ-ள்.) வாள் ஒளி
ஆகும்-வாள் ஒளியாகிய பண்பு உணர்த்தும்,
எ-று.
(எ-டு-) ‘கண்ணே, நோக்கி நோக்கி
வாள் இழந் தனவே’
(குறுந்.44) என வரும்.
(69)
துயவு என்பதன் பொருள்
368. துயவென் கிளவி அறிவின் திரிபே.
இது குறிப்பு.
(இ-ள்.)
துயவு என் கிளவி அறிவின் திரிபே - துயவு என்னுஞ் சொல்
அறிவினது
|