|
திரிதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘துயவுற்றேம் யாமாக’ என வரும்.
(70)
உயா என்பதன் பொருள்
369. உயாவே உயங்கல்.
இதுவும் அது.
(இ-ள்)
உயாவே உயங்கல்-உயா வருத்தமாகிய குறிப்பு உணர்த்தும்,
எ-று.
(எ-டு.) ‘பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ (அகம்.
19:2,3) என வரும்.
(71)
உசா என்பதன் பொருள்
370. உசாவே சூழ்ச்சி.
இதுவும் அது.
(இ-ள்.)
சாவே சூழ்ச்சி-உசா சூழ்ச்சியாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘உசாத்துணை’ (தொல்.பொ. 126) என வரும்.
(72)
வயா என்பதன் பொருள்
371.
வயாவென் கிளவி வேட்கைப்
பெருக்கம்.
இதுவும் அது.
(இ-ள்.)
வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம்- வயா
என்னுஞ் சொல் வேட்கையினது பெருக்கமாகிய குறிப்பு உணர்த்தும்,
எ-று.
(எ-டு.)
‘வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்’ (நாலடி. 201)
என வரும். இது, ‘வயவுறு மகளிர்’ (புறம்.20:14)
எனத் திரிந்தும்
நிற்கும். ஈண்டு வேட்கை என்றது, கருப்பம்
தங்கி வருத்தமுற்று
நுகரப்படும் பொருள்மேல் செல்லும் வேட்கையை.
(73)
கறுப்பு சிவப்பு என்பவற்றின் பொருள்
372. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.
இதுவும் அது.
(இ-ள்) கறுப்பும் சிவப்பும்
வெகுளிப் பொருள-கறுப்பும் சிவப்பும்
வெகுளாகிய குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று.
மேற்கூறியன நிறப்பண்பும் உணர்த்தல்
373. நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.
இஃது, எய்தியதன்மேல் சிறப்பு விதி.
(இ-ள்.)
நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்-கறுப்பு, சிவப்பு
எனத் தொழிற்படுத்துக் கூறிய சொற்கள் வெகுளியே அன்றி நிற வேறு
பாடாகிய பண்பு உணர்த்துதற்கும் உரிய
என்று கூறுவர் ஆசிரியர்,
எ-று.
இவை தொழிற்பட்டுழியும் பண்பு உணர்த்தும் என வெளிப்படு
சொல்லையுங் கூறினார், ஐயம் அகற்றுதற்கு.
(எ-டு.) ‘கறுத்த காயா’
‘சிவந்த காந்தள் முதல்சிதை மூதில்’
(பதிற்.15:11) என வரும்.
(75)
நொசிவு, நுழைவு, நுணங்கு: பொருள்
374. நொசிவும் நுழைவும் நுணங்கும்
நுண்மை.
இதுவும் அது.
(இ-ள்.)
நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை - நொசிவு
|