நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   747
Zoom In NormalZoom Out


‘கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வம் நோக்கிக், கடுஞ்சூள் தருகுவன்
நினக்கே   கானல்’   (அகம்.10:3,4)   என   வரும்.   இவ்வுரிச்சொல்,
பெரும்பான்மை திரிந்து நிற்கும். (85) 

* (பாடம்) சில்குரல், சிறுகுரல் 

கடி என்பது வேறு பொருளும் உணர்த்துதல் 

384. ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. 

இஃது, எய்தியதன்மேல் சிறப்புவிதி. 

(இ-ள்.) ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே - கடி என்னுஞ் சொல்
முற்கூறிய   பத்துமே   அன்றிச்   சிறுபான்மை  ஐயமாகிய  குறிப்பும்
கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கும் உரித்து, எ-று. 

(எ-டு.) : ‘கடுத்தனள்  அல்லளோ  அன்னை’?  ‘கடிமிளகு  தின்ற
கல்லா மந்தி’ என வரும்.                     (86) 

ஐ என்பதன் பொருள் 

385. ஐவியப் பாகும். 

இது குறிப்பு. 

(இ-ள்.) ஐ வியப்பு ஆகும்-  ஐ  வியப்பாகிய  குறிப்பு உணர்த்தும்,
எ-று. 

(எ-டு.) ‘ஐதே காமம் யானே’ (குறுந். 217) என வரும்.     (87) 

முனைவு என்பதன் பொருள்

386. முனைவுமுனி வாகும். 

(இ-ள்.) முனைவு முனிவு ஆகும் - முனைவு என்னுஞ் சொல் முனி
வாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. 

முனை என்றும் பாடம்.  

வை என்பதன் பொருள் 

387. வையே கூர்மை. 

இதுவும் அது. 

(இ-ள்.) வையே கூர்மை-வை  கூர்மையாகிய  குறிப்பு  உணர்த்தும்,
எ-று. 

(எ-டு.)  ‘வைந்நுனைப்    பகழி    மூழ்கலின்  செவிசாய்த்து’
(முல்லைப்.73) என வரும்.                      (89) 

எறுழ் என்பதன் பொருள்

388. எறுழ்வலி ஆகும். 

இதுவும் அது. 

(இ-ள்) எறுழ்வலி ஆகும்-எறுழ்  வலியாகிய  குறிப்பு  உணர்த்தும்,
எ-று. 

(எ-டு.)  ‘சிலைநவில்  எறுழ்த்தோள்  ஓச்சிவலன் வளையூ’ என
வரும்.
                                                  (90) 

உரிச்சொற்களுக்குச் சொற் புறனடை

389. மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே. 

இஃது, உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. 

(இ-ள்.)     மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் - ஒரு சொற்
பலபொருட்   குரிமை  தோன்றியும்,  பலசொல்  ஒரு  பொருட்குரிமை
தோன்றியும்  வரும்  (299),  என  இரு  கூறு செய்து பொருள் பெறக்
கூறப்பட்ட உரிச்சொல் எல்லா