|
வற்றையும், முன்னும் பின்னும் வருபவை நாடி தத்தமக்கு முன்னும்
பின்னும் வரும் மொழிகளை ஆராய்ந்து, ஒத்த மொழியான்
புணர்த்தனர் உணர்த்தல் - அம்மொழிகளுள் தமக்குப் பொருந்தின மொழியொடு கூட்டிப் பொருள் உணர்த்துக; மரபின் - அங்ஙனம் உணர்த்தி வரலாற்று முறைமையானே, தத்தம் பொருள் மன் தோன்றும்-தத்தமக்கு உரிய பொருள் விளங்கித் தோன்றும், எ-று.
எனவே, உரிச்சொல் ஆணையான் பொருள் உணர்த்தாது, வரலாற்று
முறைமையான் பொருள் உணர்த்தும், என்றார்.
(எ-டு.) போகுகொடி மருங்குல் என்பதில்
போகல் என்பது
முன்வருஞ் சொல்லான் நேர்மையை உணர்த்திற்று. ‘திரிகாய்
விடத்தரொடு* காருடை போகி’ (பதிற். 13:14) என்பதில் போகல் என்து பின் வருஞ் சொல்லான் நெடுமையை உணர்த்திற்று ‘உறுகால்’ (நற்.300) என்பது முன் வருங் கால் என்னுஞ் சொல்லான் மிகுதியை உணர்த்திற்று. ‘அணங்கிய செல்லல்’ (அகம்.22:3) என்பது
பின்வரும் அணங்கிய என்னுஞ் சொல்லான் இன்னாமையை உணர்த்திற்று. இங்ஙனங் கூறவே, ‘முன்னும், பின்னும் மொழியடுத்து வருதலும்’ (253) என இடைச்சொற்கு ஓதிய விதி இதற்குங் கூறினாராயிற்று. (91)
* (பாடம்) விடத்தேரோடு
உரிச்சொற்களுக்குப் பொருட் புறனடை
390. கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல
வேறுபிற தோன்றினும் அவற்றொடு கொளலே.
இதுவும் அது.
(இ-ள்.) கூறிய கிளவிப்
பொருள்நிலை அல்ல வேறுபிற
தோன்றினும் - முன்னும் பின்னும் வருபவை நாடியவழி
முற்கூறிய
உரிச்சொற்களின் பொருள்நிலைமை அல்லாத வேறு பிற பொருள்
தோன்றுமாயினும், அவற்றொடு கொளல்-அக்
கூறப்பட்டனவற்றோடே
அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க, எ-று.
(எ-டு.) கடிநாறும் பூந்துணர் என்றால், முற்கூறியவற்றிற்கு ஏலாது
மணப்பொருட்டு ஆயிற்று. ‘மரம் புரைபட்டது’ என்பது உயர்வு
பொருள் குறித்தது என்று கொள்ளற்க; பொந்துபட்டது என்
|