நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   749
Zoom In NormalZoom Out


னும் பொருட்டு ஆயிற்று. 

இவையே அன்றி, வேறு  பிற தோன்றினவை அவ்வச்சூத்திரங்களுள்
காட்டிப் போந்தாம்; அவற்றான் உணர்க. (92)  

பொருட்குப் பொருள் தெரியற்க எனல்

391. பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே. 

இச்சூத்திரம் முதல் ‘எழுத்துப்பிரிந் திசைத்தல்’ (395) என்னுஞ்   

உணர்த்துமாறும்,     அவற்றின்   தன்மயும்    உணர்த்துகின்றார்,
மேற்கூறுகின்ற    பொது    இலக்கணமாகிய    எச்சஇயற்கு    ஏற்ப
அதிகாரப்பட்டமை கருதி. 

(இ-ள்.) சொல்லானும் பல சொல்லானும் உணர்த்தியவழிப் பொருள்
உணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருள் தெரியுமாயின்,
அது வரம்பு இன்று - அங்ஙனம் தெரிதல்  வரம்பின்றோடும்; அதனால்,
பொருட்குப் பொருள் தெரியற்க, எ-று. 

ஒரு     சொற்கு ஒரு  சொல்லானும்  பல  சொல்லானும் பொருள்
உணர்த்தினானும்   உணரும்  உணர்வு  இல்லாதானை  உணர்த்துமாறு
மேற்கூறுகின்றார்.                               (93)

ஆசிரியன் உணர்த்த வல்லனாதல்  

392. பொருட்குத்திரி பில்லை உணர்த்த வல்லின். 

இதுவும் அது. 

(இ-ள்.)     உணர்த்த      வல்லின்     பொருட்குத்    திரிபு 
இல்லை-மாணாக்கன் உணருமாறு   அறிந்து   ஆசிரியன்   உணர்த்த
வல்லனாயின், ‘இச்சொல் இப்பொருட்டு’ என்று தான் கூறியபொருட்குத்
திரிபு இன்றாம், எ-று. 

யாம்   என்பது படர்க்கை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் என்றால்
உணராதானை,  அது  சேய்மைக்கண்  நின்றாரைத் தன்னொடு கூட்டிக்
கூறப்பட்டுப்   புடை   பெயர்ச்சி   இன்றி   நின்றதொரு  பொருளை
உணர்த்திற்றுக் காண், எனத் தொடர்மொழி கூறியானும், சேய்மைக்கண்
நின்றாரைத்     தன்     தன்னொடு     சேர்த்துக்    காட்டியானும்
பொருளுணர்த்துக.  

‘உண்டேம்     என்பது  பன்மைத்  தன்மை’  என்றால்  பொருள்
உணராதானை,  ‘இது  யானும்  இவனும் அவனும் உண்டல்தொழிலைச்
சேய்தேம்    என்னும்    பொருள்    உணர்த்திற்றுக்காண்,’    எனத்
தொடர்மொழி கூறியானும், அவரைத் தன்னொடு சேர்த்தித்