|
தொழில் நிகழ்த்திக் காட்டியானும் பொருளுணர்த்துக.
‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே!’ (புறம். 235:1)
என்புழி மன்னைச்சொல், ‘இனி அது கழிந்தது!’ என்னும் பொருள் குறித்து நின்றதுகாண், என்றால் பொருள் உணராதானை, ‘அரிதாகப் பெற்ற கள்ளை எக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின், எமக்குக் கள் உண்டல் போயிற்று என்றல் இதன் பொருள்’ எனத் தொடர்மொழி கூறிப் பொருளுணர்த்துக.
‘உறுகால்’ (நற்.300) என்புழி ‘உறு’ என்பது மிகுதி என்றால் பொருள்
பொருள்’ என்று தொடர்மொழி கூறியானும், கடுங்கால் உள்வழிக்
காட்டியானும் உணர்த்துக.
இங்ஙனம் நால்வகைச் சொல்லையும் மாணாக்கன் உணருமாறு
அறிந்து உணர்த்தவே பொருட்குத் திரிபின்றாம்.
இங்ஙனம் உணர்த்தவும் உணராதானை உணர்த்தற்பாலனல்லன்
என்கின்றது மேல் வருகின்ற சூத்திரம்.
(94)
மாணாக்கனும் உணர வல்லனாதல்
393. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.
இதுவும் அது.
(இ-ள்.) உணர்ச்சி
வாயில் - நால்வகைச் சொல்லையும்
மாணாக்கன் உணர்தற்குக் கூறிய
இவ்விலக்கணம், உணர்வோர்
வலித்து - தன்ன உணர்வோரது உணர்வைத்
தனக்கு வாயிலாக
உடைத்து, எ-று.
எனவே, தன்னை உணரும் உணர்வு இல்லாதாற்குத் தான் சொல்வது
பயன்படாது ஆகலின் அதனை அவற்கு உணர்த்தற்க என்பது
பொருளாயிற்று.
இத்துணையும் உணருமாறும் உணர்த்துமாறும் உணர்த்தினார். (95)
சொற்பொருள் உணர்த்தும் காரணம் ஆசிரியர்க்கே புலப்படல்
394. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
இது, சொற்பொருள் உணர்த்துங் காரணம்
ஆசிரியர்க்கே
புலப்படும் என்கின்றது.
(இ-ள்)
மொழிப்பொருட் காரணம் - நால்வகைச் சொல்லுக்கும் பொருளை அறிவித்து நிற்கின்றதொரு காரணம் உண்டாம் தன்மை, விழிப்பத் தோன்றா - நுண்ணுணர்வு இல்லாதோருக்கு மரபு என்று கொள்வது அல்லது விளங்கத் தோன்றா, எ-று.
எனவே, நுண்ணுணர்வு உடையோர்க்குக் காரணம் உண்டாந் தன்மை
விளங்கத் தோன்றும் என்பது பொருளாயிற்று.
இது மரபு என்று கோடல், ‘நிலந்
|