|
தீ நீர்வளி’ (மரபியல் 89) என்னும்
மரபியற் சூத்திரத்தினாலும்
ஆசிரியர் உணர்த்தினார்.
உலகத்துப் பொருள்களின் நிகழ்ச்சிக்குச்
சொல் காரணம் ஆதலின்,
‘மொழிப்பொருட் காரணம்’ என்றார்.
இக்காரணம் அக்காரியங்களோடு
இயைந்து நிற்கின்ற தன்மை
ஆசிரியர்க்கல்லது புலப்படாமையின்,
‘விழிப்பத்தோன்றா’
என்றார். (96)
உரிச்சொற்கு எழுத்துப் பிரிந்து இசையாமை
395. எழுத்துப்பிரிந் திசைத்தல்
இவணியல் பின்றே.
இஃது, உரிச்சொற்கு எழுத்துப்
பிரிந்து இசைத்தல் இன்று
என்கின்றது.
(இ-ள்)
எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண்
இயல்பு இன்று -
எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதி நிலையுமாகப்
பிரிந்து வேறு வேறு
பொருள் உணர்த்துதல் உரிச்சொல்லிடத்து
இயல்புடைத்தன்று, எ-று.
எனவே, எழுத்துகள் திரிந்து
பொருள்
உணர்த்துதல்
உரிச்சொல்லிடத்து இயல்புடைத்து என்றவாறாம்.
எழுத்துக்கள் பிரிந்திசைத்தன
வினைச்சொல்லும் ஒட்டுப்பெயரும்.
அவற்றுள், வினை பிரிந்தன வினைஇயலுள்
ஈறுபற்றி ஓதிப் பிரித்துக்
காட்டினார்; பெயர் பிரிந்தன ‘நம்மூர்ந்து
வரூஉம் இகரஐ காரமும்’
என்பன முதலியவற்றான் காட்டினார். ‘வெற்பன்,
பொருப்பன்’ என்பன
முதனிலை பிரிப்பப் பிரியுமேல்,
அவையும் ஒட்டுப்பெயர் என்று
உணர்க.
தாமாகப் பொருள் உணர்த்தாமையின்,
பிரிதலும் பிரியாமையும்
இடைச்சொற்கு இல.
இனி, உரிச்சொல் எழுத்துத்
திரிந்து இசைத்தன எல்லாம்
இவ்வோத் தினுள் காட்டிப் போந்தவற்றான்
உணர்க. (97)
உரிச்சொற்களுக்குப் புறனடை
396.
அன்ன பிறவுங் கிளந்த அல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை
கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்தென அறியும
வரம்புதமக் கின்மையின் வழிநனி
கடைப்பிடித்
தோம்படை ஆணையிற் கிளந்தவற்
றியலாற்
பாங்குற உணர்தல் என்மனார்
புலவர்.
இஃது, உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது.
(இ-ள்.)
கிளந்த அல்ல பிறவும்-சொல்லப்பட்டனவே
அன்றி அவை
போல்வன பிறவுமாய், பன்முறையானும், பரந்தன
வரூஉம் உரிச்சொல்
எல்லாம்-ஈறுபற்றி உணர்த்தற்கு அடங்காது
பலவற்றானும் பரந்து வரும்
உரிச்சொல் எல்லாம், பொருட்குறை கூட்ட -
பொருளைச் சொல் இன்றி
யமையாக் குறைபாடு தீரப் பொருளை
அதனொடு கூட்டி உணர்த்த,
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் வரம்பு தமக்கு
இன்மை
|