|
எச்சவியல்
நால்வகைச் சொற்கள்
397. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
என்பது சூத்திரம். முற்கூறிய
எண்வகை ஓத்தினுள்ளும் உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சிநின்ற சொல் இலக்கணங்களைத் தொகுத்து உணர்த்துதலின் இஃது எச்ச இயல் என்னும் பெயர்த்தாயிற்று. செய்யுட்கு உரிய சொல்லும், அவற்று இலக்கணமும், அவற்றின் விகாரமும், அச்செய்யுட் பொருள்கோளும் முதலில் உணர்த்துகின்றார். இச்சூத்திரம், செய்யுள் விதி ஒழிபு பெரும்பான்மைய ஆதலின், செய்யுட் செய்தற்கு உரிய சொற்கள் இவை என அவற்றின் வரையறை கூறுகின்றது.
(இ-ள்.) இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே - இயல்பாகிய சொல்லும் அதுதான் திரிந்து வருஞ்சொல்லுந் திசைக்கண் வழங்குஞ் சொல்லும் ஆரியச் சொல்லும் என்று கூறிய அத்துணையே, செய்யுள் ஈட்டச் சொல்லே- ஒரு பொருண்மேல் நிகழுஞ் செய்யுளை ஈட்டுதற்கு உரிய சொல்லாவன, எ-று.
எனவே, பிற பாடைச்சொற்கள் ஈட்டுதற்கு உரியவன்றிச் சிறுபான்மை
வருமாயின. அவை, செப்பு, குளிரு, சிக்கு, அந்தோ என்றாற்
போல்வனவும், பிறவுமாம்.
இயல்பாகிய சொல், முற்கூறிய நால்வகைச்
சொல்லேயாய் நின்று,
செய்யுட்கு உரித்தாம்.
அவ்வியற்சொல், திரிசொல் ஆங்கால்
பெரும்பான்மை பெயராகவும்,
சிறுபான்மை தொழிற்பெயராகவும் வருதலன்றி ஏனையவாய் வாரா. (11)
இயற்சொல்லுக்கு இலக்கணம்
398.
அவற்றுள்,
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.
இது, நிறுத்த முறையானே இயற்சொற்கு இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்.)
என்று கூறிய சொல்தாம், செந்தமிழ் நிலத்து வழக்கொடு
சிவணி - செந்தமிழ் நிலத்தின்கண்ணே வழங்குத
|