நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   754
Zoom In NormalZoom Out


லொடு   பொருந்தி, தம் பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே -
அச்செந்தமிழ்   நிலத்துங்   கொடுந்தமிழ்  நிலத்துங்  கேட்டோர்க்குத்
தத்தம் பொருள் வழுவாமல் ஒலிக்குஞ் சொல்லாம், எ-று.  

திரிபின்றி  இயல்பாகிய  சொல்லாவன,  நிலம்,  நீர்,   தீ,   வளி,
சோறு,  கூழ்,  பால்,  மக்கள்,  மரம்,  தெங்கு,    கமுகு    என்னுந்
தொடக்கத்தன. 

செந்தமிழ் நிலமாவது,  வையை யாற்றின்  வடக்கும், மருத யாற்றின்
தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம். (2) 

திரிசொல்லுக்கு இலக்கணம்  

399. ஒருபொருள் குறித் வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும
இருபாற் றென்ப திரிசொற் கிளவி. 

இது, திரிசொற்கு இலக்கணங் கூறுகின்றது. 

(இ-ள்.)    திரிசொற்   கிளவி  -  அவ்வியற்சொல்  திரிந்த  திரி
சொல்லாகிய  சொல்லை,  ஒரு  பொருள் குறித்த வேறு சொல்லாகியும்
வேறு பொருள்  குறித்த  ஒரு  சொல்லாகியும் இருபாற்று  என்ப- ஒரு
பொருளைக் குறித்து வரும்   பல   சொல்லாயும்   பல   பொருளைக்
குறித்து  வரும்  ஒரு  சொல்லாயும்  இருவகைப்படும்  என்று  கூறுவர்
ஆசிரியர், எ-று. 

அவ்வியற்சொல்லைத்    திரிக்குங்கால் தம் எழுத்துச் சிறிது நிற்பத்
திரிப்  பனவும்,  அவ்வியற்சொல்  தம்மையே  பிறசொற்  கொணர்ந்து
முழுவதூஉந் திரிப்பனவும் என இருவகையாம். 

(எ-டு.)  கிளி, மயில் என்பவற்றைக் கிள்ளை, மஞ்ஞை எனச் சிறிது
நிற்பத்   திரித்தும்,  அவற்றைத்  தத்தை, பிணிமுகம் எனப் பிற சொற்
கொணர்ந்து    முழுவதூஉந்       திரித்துங்    கூறுதல்.   மலைக்கு
வெற்பு,  விலங்கல் விண்டு என்பன முழுவதூஉந் திரித்தன. இவை ஒரு
பொருள்  குறித்த   வேறு   சொல்.  உந்தி  என்பது  யாழ்ப்பத்தலும்,
கொப்பூழும்,    தேர்த்தட்டும்,    கானியாற்றிடையும்    உணர்த்துதல்
முழுவதூஉம் திரித்தது. இது, வேறு பொருள்