|
குறித்த ஒரு சொல். அளகு என்பது கோழி, கூகை, மயில் என்று
மூன்று சாதியிற் பெண்பாற்கும் பெயராதலின் (மரபியல் 56,57),
இதுவும்
வேறு பொருள் குறித்ததாம். இதுவும் முழுவதூஉந் திரித்தது. இவை
எல்லாம் பெயர்த் திரிசொல்.
‘கேட்டீவாயாயின், செப்பீமன், ஈங்குவந்தீத்தாய்,
புகழ்ந்திகு
மல்லரோ, என்மனார், என்றிசினோரே, பெறலருங்குரைத்து’ என்பன
போல்வன வினைத் திரிசொல். இவை சிறிது நிற்பத் திரித்தன.
பைங்கண், பைந்தார், பச்சிழை; காரா; சேதா என்றாற் போலும்
பண்புத் தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மை எனப்
பண்புப் பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிருங் கெட்டு வருமொழிக்கேற்ப ஒற்றுத் திரிந்தும் திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாகியும் திரிந்தன என்றும், ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிருங் கெட்டு ஆதிநீண்டது என்றும், ஈற்றுயிர் மெய்யும் இடையில் ஒற்றுங் கெட்டு ஆதிநீண்டது என்றும் பின்னுள்ளோர் சந்தி முடிக்கின்றது பொருந்தாது. என்னை? பைங்கண் என்புழிப் பசியதாகிய கண் எனப் பண்பு உணர்த்தும் ஈற்றை விரித்தல் அன்றிப் பசுமைக்கண் எனத் தாந்தொகுத்த பண்புப் பெயரை விரித்தலாகாமையின். இவை செய்யுட்குப் புலவர் சிறிது நிற்பத் திரித்துக் கொண்ட பெயரெச்ச வினைக்குறிப்புப் பெயரென்று உணர்க. எழுத்ததிகாரத்துச் செய்யுட்கு இவ்வாறு முடிக்க, என ஆசிரியர் முடிபு கூறியவற்றை எல்லாம் செய்யுள் முடிபு என்று கூறலும், வழக்குச் சொல் இவ்வாறு திரிந்து வந்தனவற்றை வினைத் திரிசொல் என்று பெயர் கூறலும் ஆசிரியர் கருத்தாம்.
இடையும் உரியும் திரிசொல்லாய் வருமேனும் உணர்க. (3)
திசைச்சொற்கு இலக்கணம்
400.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
இது, திசைச்சொற்கு இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே -
செந்தமிழ்
நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் பன்னிரண்டையும்
புறஞ்
சூழ்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாந்தாங்
|