|
குறித்த பொருளையே விளக்குந் தன்மையை உடையன, எ-று.
உம்மையை எச்ச உம்மையாக்கிப் பொருள் உரைக்க. எனவே,
இயற்சொற்போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்காவாயின.
பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு,
குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலைய மானாடு,* அருவா நாடு, அருவாவடதலை நாடு எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் ஈறாக எண்ணுக.
இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும்,
பழந்தீவும், கொல்லமும், கூபமும், கொங்கணமும், துளுவும், குடகமும் (துளுவம்), கருநடமும், கூடமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமும் ஆம்.
தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை, என்பனவற்றைப் பெற்றம் என்றும், குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், சீத நாட்டார் ஏடா என்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும் தம்மாமி என்பதனைத் தந்துவை என்றும் பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும் சிறுகுளத்தைப் பாழி என்றும், அருவாநாட்டார் செய்யைச் செறு என்றும் சிறுகுளத்தைக் கேணி என்றும், அருவாவடதலைநாட்டார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப.
இனிச் சிங்களம், அந்தோ! என்பது. கருநடம், கரைய, சிக்க, குளிர
என்பன. வடுகு, செப்பு என்பது. தெலுங்கு, எருந்தைப் பாண்டில் என்பது. துளு மாமரத்தைக் கொக்கு என்பது.
ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.
(4)
* (பாடம்) மலாட்டுநாடு
வடசொற்கு இலக்கணம்
401.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
இது, வடசொற்கு இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
வடசொற்கிளவி-வடசொல்லாகிய சொல், வடவெழுத்து ஒரீஇ
- உரப்பியும் எடுத்துங் கனைத்துங் கூறும் வடவெழுத்துக்களின் நீங்கி,
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் - இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம், எ-று.
அவை, வாரி, மேரு, குங்குமம், மணி, மானம், மீனம், வீரம், வேணு,
காரணம், காரியம், நிமித்தம், காரகம் என்றாற்போலச் சான்றோர் செய்யுட்கண் வருவன.
இனி, ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன, கமலம், அமலம், மூலம்,
கோபம், ஞானம், ஞேயம், தமாலம், தாரம், திலகம், நாமம், யானம், யோனி, உற்பலம் இவையும், இவை போல்வன பிறவுமாம்.(5)
மேலதற்கு ஒரு புறனடை
402. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.
இதுவும் அது.
(இ-ள்)
சிதைந்தன வரினும்-பொது எழுத்தான் இயன்றனவே அன்றி
வடவெழுத்
|