|
தான் இயன்ற வடசொல் சிதைந்து வரினும், இயைந்தன
வரையார்-பொருத்தமுடையன செய்யுளிடத்து நீக்கார், எ-று.
(எ-டு.)
‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம். 124:15) ‘தசநான் கெய்திய பணை மருள் நோன்றாள்’ (நெடுநல்.115) வாதிகை அன்ன கவைக்கதிர் இறைஞ்சி’ (மலைபடு.112) ‘கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை’ (புறம். 378:18) ‘பேதை அல்லை மேதையங் குறுமகள்’ (பரி.21-3) என்றாற் போல்வன சான்றோர் செய்யுட்கண் சிதைந்து வந்தன.
இனி, தந்திரம், சூத்திரம், விருத்தி, அருத்தாபத்தி, உத்தி என்றாற்
போல்வன, நூலுள் சிதைந்து வந்தன. பங்கயம், இடபம், விசயம், இருடிகள், மேகம், பந்தம், மயானம், விடம், துங்கம், பலம், பாரம், சர்ச்சரை, சாதி, சேனை, சித்தி, சாதனம், அயன், அரி, அரன், ஆரம், அருகம், சிங்கம், மோக்கம், காமம், பக்கம், சூலம், சதம், போதகம், போகம், சுத்தம், சலம், மோகம், யோகம், வந்தனை, வேலை, சாலை, மாலை, உவமை, வனிதை, புரி, மேதினி, குமரி, நதி,
அரங்கம், இலங்கை, இயக்கன், உலோபம், உலோகம், நிருத்தம், கீதம், வாச்சியம், வச்சிரம், அருத்ம், கருமம், கருப்பம், காப்பியம், பருப்பதம் என்றாற்பேல்வன பின்னுள்ளோர் செய்யுட்கண்
திரிந்து ஏற்கும் எழுத்துக்களான் மருவி வந்தன.
இனி, சிதைந்தன வரினும் எனப் பொதுப்படக் கூறியவதனான், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவுங் கொள்க.
(6)
செய்யுள் விகாரம்
403.
அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய என்மனார் புலவர்.
இது செய்யுள் விகாரம் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
அந்நாற்சொல்லும் தொடுக்குங்காலை - முற்கூறிய நான்கு
சொல்லையும் செய்யுளாகத் தொடுக்குங்கால், வலிக்கும் வழி
வலித்தலும்-மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டும்வழி வல்லொற்று
ஆக்கலும், மெலிக்கும்வழி மெலித்தலும்-வல்லொற்றை மெல்லொற்றாக்க
|