நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   758
Zoom In NormalZoom Out


வேண்டும் வழி மெல்லொற்று ஆக்கலும், விரிக்கும் வழிவிரித்தலும்-
சந்தி  நிரம்புதற்கு  ஒரு  சொல்லை விரிக்க வேண்டும்வழி விரித்தலும்,
தொகுக்கும்வழித் தொகுத்தலும் - சந்தம் உளவாதற்கு ஒரு சொல்லைத்
தொகுக்க      வேண்டும்வழித்       தொகுத்தலும்,     நீட்டும்வழி
நீட்டலும்-குற்றெழுத்தினை    நீட்ட    வேண்டும்   வழி   நீட்டலும்,
குறுக்கும்வழி குறுக்கலும்-நெட்டெழுத்தினைக் குறுக்க வேண்டும் வழிக்
குறுக்கலுமாகிய  அறுவகை விகாரமும், நாட்டல் வலி என்மனார் புலவர்
-  செய்யுள்  இன்பம்  பெறச் செய்வார் நாட்டுதலை வலியாக உடைய
என்று கூறுவர் புலவர், எ-று. 

(எ-டு.)  ‘முத்தை  வரூஉங்  காலம்  தோன்றின். ’ (எ.164) ‘குன்றிய
லுகரத் திறுதி   ஆகும்.’  (எ.8)  ‘தண்ணந்  துறைவன்  கொடுமை.’
(குறுந்.9) ‘இடையெனப்  படுப.’  (251)  ‘வெள்வளை நல்காள் வீடுமென்
உயிரே.’ ‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ என முறையே காண்க. 

‘பாசிலை,     (புறம்.  54:10)  ‘அழுந்துபடு  விழுப்புண்’  (நற்.97)
என்றாற்போல   இரண்டு  விகாரம்  வருவனவற்றை  ‘நாட்டல்  வலிய’
என்றதனாற் கொள்க. (7)

பொருள்கோள் வகை

404. நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே. 

இது, செய்யுள் செய்வழி அதன் பொருட்கிடை கூறுகின்றது. 

(இ-ள்.) பொருள் உணர்த்தும் சொற்கள் அங்ஙனம்  இயற்கையாகக்
கூடிப் பொருள் உணர்த்தாது விகாரப்பட்டுப் பொருள் உணர்த்துங்கால்,
அவை -  அவ்விகாரவகை, நிரல்நிறை கண்ணம்  அடிமறி மொழிமாற்று
நான்கு என்ப - நிரல்நிறையும் சுண்ணமும் அடிமறியும்  மொழிமாற்றும்
என நான்கு என்று கூறுவர் ஆசிரியர் எ-று.

நிரல்நிறையுஞ் சுண்ணமும்,   நிரலே    நிறுத்தலுந்    துணித்துக்
கூட்டுதலுமாகிய வேறுபாடு உடைமையின், மொழிமாற்றின் வேறாயின.
                                                   (8) 

நிரல்நிறைப் பொருள்கோள்

405. அவற்றுள்,